Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: மாபெரும் வரலாறு.. இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்.. சாதனை சதம்

மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். இது அவரது 34 ஆவது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். மேலும், இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை அடித்து வரலாறு படைத்து இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். இதற்கு முன் இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக 55 இன்னிங்ஸ்களில் 10 சதம் அடித்து இருந்தார். அவரது சாதனையை முறியடித்து இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிராக 43 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 11 சதம் அடித்து இருக்கிறார்.

ind vs aus steve smith india vs australia test match vs

இந்திய அணிக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டை வைத்து இருப்பது மீண்டும் உறுதி செய்து இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் மட்டும் ஸ்டீவ் ஸ்மித் 7 சதங்களை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்களும், உஸ்மான் கவாஜா 57 ரன்களும் எடுத்து இருந்தனர்.

அடுத்து வந்த மார்னஸ் லாபுஷேன் 72 ரன்கள் சேர்த்தார். அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினார். எனினும், மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 4, அலெக்ஸ் கேரி 31 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தனர்.

அதன் பின் பாட் கம்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தனது 34 ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து இருந்தன. இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார். தற்போது நான்காவது போட்டியிலும் சதம் அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை கடந்தது.

Story first published: Friday, December 27, 2024, 6:31 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+