For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி பாட்டுப் பாடினதை பற்றி பேசறீங்களே.. ஸ்டீவ் ஸ்மித் குத்தாட்டம் போட்டது மறந்து போச்சா?

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளம் வீரர் ரிஷப் பண்ட்டுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அந்த விளம்பரம் கிரிக்கெட் உலகில் நகைப்புக்குரிய ஒன்றாக மாறி பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் அதை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜ் இந்த விளம்பரம் குறித்து கூறிய கருத்து, இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. மேலும், அவருக்கு பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.

தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க.. எதிரணியை மிரட்ட அவரை விட்டா ஆள் இல்லை! தயவுசெய்து ஜடேஜாவை பெஞ்ச்சுல உட்கார வைக்காதீங்க.. எதிரணியை மிரட்ட அவரை விட்டா ஆள் இல்லை!

ராப் பாடல்

ராப் பாடல்

ஆண்கள் அழகு சாதனப் பொருள் குறித்த அந்த விளம்பரத்தில் விராட் கோலி - ரிஷப் பண்ட் இருவரும் "ராப்" வகை பாடல் பாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இருவரும் தங்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர்.

பணத்துக்காக செய்கிறார்கள்

பணத்துக்காக செய்கிறார்கள்

இது குறித்த ட்விட்டர் பதிவின் கீழ், பிராட் ஹாட்ஜ், "பணத்துக்காக மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அற்புதம்" என கிண்டல் அடித்திருந்தார். இது தான் இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

பொங்கி எழுந்த ரசிகர்கள்

பொங்கி எழுந்த ரசிகர்கள்

உடனே பொங்கி எழுந்த நம் இந்திய இன்டர்நெட் சிங்கங்கள், ஐபிஎல் விளம்பரம் ஒன்றிற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்டீவ் ஸ்மித், கன்னா பின்னாவென ஒரு குத்தாட்டம் போல ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் ஆடிய ஆட்டம்

அந்த வீடியோவில் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தானின் கலாச்சார நடனம் ஆடும் முயற்சியில், குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தார். அவருடன் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய வீரர் ரஹானே இடம் பெற்றிருந்தனர்.

பணத்துக்காக குத்தாட்டம்

பணத்துக்காக குத்தாட்டம்

இதைக் காட்டி, "உங்க ஆஸ்திரேலிய வீரர் கூடத்தான் பணத்துக்காக குத்தாட்டம் போடுகிறார்" என நக்கல் அடித்துள்ளனர் நம்ம ஊர் கிரிக்கெட் ரசிகர்கள். இது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியர்களை சீண்ட கையில் கிடைத்த அத்தனையும் காட்டி, பிராட் ஹாட்ஜ்-ஐ கிண்டல் செய்தனர்.

பால் டேம்பரிங்

ஒருவர் "பால் டேம்பரிங்" விவகாரத்தை சுட்டிக் காட்டி, "போட்டியில் வெல்ல மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்" என கிண்டல் அடித்துள்ளார்.

சமாதானம்

கடும் எதிர்ப்பை கண்ட பிராட் ஹாட்ஜ், தான் கூறியதை அரைகுறையாக புரிந்து கொண்டு இப்படி பேசுகிறீர்கள். தானும் இதே போல (கோலி போல) செய்வேன் எனக் கூறி சில எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்தார். அப்ப நமக்கு இப்படி விளம்பரம் மூலம் பணம் கிடைக்கலைன்னு தான் சொன்னாரோ?

Story first published: Saturday, May 18, 2019, 18:42 [IST]
Other articles published on May 18, 2019
English summary
Brad Hodge trolled by Indian fans after he make fun of Virat Kohli’s new ad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X