For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ரன்னே அடிக்கலனாலும் கோலி அதை தவறாம பண்ணிடுறார்" - குசும்பு பிராட் ஹாக் கலாய்

ஹெட்டிங்லே: இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டுவது போல் லைட்டாக தனது ஸ்டைலில் கலாய்த்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று வியக்க வைத்தது.

 கம்பேக் கொடுக்க தீவிரம்

கம்பேக் கொடுக்க தீவிரம்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேவில் நாளை (ஆக.25)ம் தேதி தொடங்குகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்பில் இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வியூகங்களை அமைத்து வருகிறது. அதேசமயம், இந்திய அணியின் லார்ட்ஸில் கடைசி நாளில் வெளிப்படுத்திய மிரட்டலான ஃபார்மை அப்படியே மூன்றாவது போட்டியிலும் வெளிப்படுத்தும் நோக்கில் முனைப்புடன் உள்ளது.

 சூர்யா இன்

சூர்யா இன்

இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வில் தான் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, தொடர்ந்து சொதப்பி வரும் புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போட்டி தொடங்க, இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், எக்ஸ்பெர்ட்ஸ் பலரும், தங்கள் மாதிரி பிளேயிங் லெவன் அணியில், புஜாராவுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவை அணியில் சேர்த்துள்ளனர். அந்த வகையில் இன்று மாதிரி பிளேயிங் லெவன் அணியும் வெளியாகியுள்ளது. அதில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா / அஷ்வின், முகமது சிராஜ், முகமது ஷமி, பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 புது சாதனை

புது சாதனை

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பி வருவதால், நிச்சயம் அதனை பயன்படுத்தி இந்திய அணி மீண்டும் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை வம்பிழுத்தது தான். முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசியதற்காகவும், ஆண்டர்சனும் விராட் கோலியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டதற்காகவும், இரண்டாம் இன்னிங்ஸில் பும்ரா பேட்டிங் செய்த போது அவருக்கு சரமாரியாக பவுன்ஸ் பந்துகள் வீசப்பட்டன. இதனால் தான் களம் சூடானது. லார்ட்ஸ் பெவிலியன் பால்கனியில் அமர்ந்து, கேப்டன் கோலி உட்பட இந்திய வீரர்கள், பும்ரா - ஷமியை உற்சாகப்படுத்த கேப்டன் பும்ரா - ஷமி கூட்டணி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்களுக்கு புது ரெக்கார்டு படைத்தது. பிறகு 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா வெற்றியையும் பதிவு செய்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 பின்வாங்காத கோலி

பின்வாங்காத கோலி

இந்நிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தன்னுடைய யூடியூப் சேனலில் விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து அவர், "கேப்டன் என்பவர் எப்போதும் தாக்கம் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதனை விராட் கோலி கச்சிதமாக செய்து வருகிறார். பேட்டிங்கில் தனது தடுமாற்றத்தை, ஆட்டத்தில் தான் ஏற்படுத்தும் கேப்டன்ஷிப் தாக்கத்தினால் மறைத்து விடுகிறார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 62 ரன்களே அடித்திருக்கிறார். ஆனால், அதற்காக அவர் சோடைப்போவதில்லை. பின்வாங்குவதுமில்லை. களத்தில் அதே உற்சாகத்துடனும், வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உள்ளார். அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. களத்தில் இறங்கிய பிறகு, தன் பொறுப்பை உணர்ந்து அவர் அதில் வேலை செய்கிறார். ஆட்டத்தில் துடிப்பாக, வேகமாக அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். இதனை பார்க்கும் இளம் வீரர்கள், அவர்களும் அதே ஆக்ரோஷ, துடிப்பான மனநிலைக்கு மாறுகின்றனர். தங்கள் கேப்டனே இப்படி ஆக்ரோஷமாக இருப்பதால், வீரர்கள் ஆட்டோமேட்டிக்காக அந்த மோடுக்கு சென்றுவிடுகின்றனர்.

 மதிப்புமிக்க கோலி

மதிப்புமிக்க கோலி

விராட் கோலி எந்த போட்டியாக இருந்தாலும் களத்தில் சிறப்பான சூழலை உருவாக்குகிறார், அங்கு நிறைய ஒழுக்கம் இருக்கிறது, அங்கு ஒரு தூய்மையான சூழல் இருக்கிறது. பயிற்சி நேரத்தில், அங்கு நேரம் வீணாக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நொடியும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உங்களை உறுதி செய்யவும் மதிப்புமிக்கதாக கோலி மாற்றுகிறார். விராட் கோலி, தான் செய்யாத அல்லது செய்ய முடியாததை மற்ற வீரர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 24, 2021, 20:29 [IST]
Other articles published on Aug 24, 2021
English summary
brad hogg about kohli of 3rd test against england - கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+