Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரும் 360 டிகிரி ப்ளேயர் தான்....பவுலிங் போடுவது ரொம்ப டேஞ்சர்..அறிமுக வீரரை புகழும் முன்னாள் வீரர்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு வீரருக்கு எதிராக பந்துவீசுவது கடினமாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியில் ஒரு வீரர் குறித்து இங்கிலாந்து வீரர்களுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல் டி20

முதல் டி20

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் டி20 தொடர் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்திய அணிக்கு இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே அதனை மனதில் வைத்து இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் போராட்டம்

நீண்ட நாள் போராட்டம்

அந்தவகையில் இந்திய அணியில் முதல்முறையாக இஷான் கிஷான், ராகுல் தேவட்டியா சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளேயிங் 11ல் 4வது விக்கெட்டிற்கு களமிறங்க இஷான் கிஷானுக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் போட்டி நிலவி வருகிறது. 3வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாக் எச்சரிக்கை

ஹாக் எச்சரிக்கை

இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், 3வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் 360 டிகிரியிலும் அடிக்கக்கூடிய திறமையான வீரர். மிக ஆக்ரோஷமானவர் அவருக்கு எதிராக பந்துவீசுவது என்பது கடினமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

அக்‌ஷர்

அக்‌ஷர்

டெஸ்ட்டை போன்று அகமதாபாத் பிட்ச்-ல் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. அதில் சுந்தர் மற்றும் சாஹால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். ஆனால் அதில் அக்‌ஷர் பட்டேல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகியோர் அஸ்வினை போன்று உயரமானவர்கள் அல்ல. ஆனால் அக்‌ஷர் பட்டேல் உயரமானவர். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அக்‌ஷருக்கு எதிராக ஆட திணறினர் என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 12, 2021, 17:54 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+