ஏம்பா பிராவோ!! சிக்கன் டான்ஸ் ஆடிக் கிட்டே கேட்ச் பிடிக்கலாமா? மிஸ் ஆனா என்ன பண்றது?
ஷார்ஜா : டி10 லீக் எனப்படும் பத்து ஓவர் போட்டிகள் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
அதில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு ஆடி வரும் பிராவோ பந்தை வீசி, தானே கேட்ச்சும் பிடித்தார்.
இந்த கேட்ச்சை பிடிக்கும் முன்னரே விக்கெட் வீழ்ச்சியை கொண்டாட ஆரம்பித்து விட்டார் பிராவோ. அதுவும் "சிக்கன் டான்ஸ்" போட்டு கொண்டாடினார்.

நபி பேட்டிங் செய்தார்
டி10 லீகில் எலிமினேட்டர் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியும், பெங்கால் டைகர்ஸ் அணியும் மோதின. முதலில் பந்து வீசிய மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக ஆடிய பிராவோ 9வது ஓவரை வீசினார். எதிர்புறம் முகமது நபி பேட்டிங் செய்து வந்தார்.

பிராவோ செம பந்துவீச்சு
பிராவோ வழக்கம் போல பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த மெதுவாக பந்து வீச முடிவு செய்தார். எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் பந்து சென்றது. நபி பந்தை கணிக்க முடியாமல் தூக்கி அடிக்க பந்து பிட்ச்சுக்கு மேலே சென்றது. பந்தை பிடிக்க பிராவோ விரைந்தார்.

சிக்கன் டான்ஸ் போட்ட பிராவோ
அப்போது எப்படியும் கேட்ச் பிடித்து விடுவோம் என முடிவு செய்துவிட்ட பிராவோ "சிக்கன் டான்ஸ்" போட்டு கோழி மாதிரி நடந்து கொண்டே சென்று கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின்னரும் சிக்கன் டான்ஸ் போட்டு விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.
DJbravo_edit_0 from Prithvi Shaw on Vimeo.
வால்த்தனம் பண்ணலாமா?
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எப்போதும் இது போல குறும்புத்தனம் செய்வார்கள். அதுக்குன்னு, இப்படி கேட்ச் பிடிக்கும் வேளையில் கூடவா வால்த்தனம் பண்றது? இந்த போட்டியில் பிராவோ அணி வென்றது. பிராவோ பந்துவீச்சில் 2 ஓவர் வீசி 4 விக்கெட்கள் சாய்த்தார். பேட்டிங்கில் 9 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார்.


Click it and Unblock the Notifications