Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோவின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் டோணி, கோஹ்லி

சென்னை: கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோ தனது இசை ஆல்பத்தில் கேப்டன் டோணியை ஆட வைக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்வெய்ன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி வருகிறார். மைதானத்தில் பிராவோ டான்ஸ் ஆடுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் பிராவோ தனது பாடும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சலோ சலோ

சலோ சலோ

பிராவோ சலோ சலோ என்ற ஒரு பாடல் அங்கிய இசை ஆல்பத்தை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஷெர்வானி

ஷெர்வானி

நிகழ்ச்சிக்கு ஷெர்வானி அணிந்து வந்த பிராவோ மேடையில் தனது பாடலை பாடி ஆடினார். விரைவில் சலோ சலோ வீடியோவை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்தார்.

டோணி

டோணி

பிராவோவின் சலோ சலோ வீடியோவுக்காக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, டாரன் சாமி, பிரன்டென் மெக்கல்லம், கியரன் போலார்டு, ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் ஏற்கனவே நடனமாடியுள்ளனர். சிஎஸ்கே கேப்டன் டோணியும், ரவீந்திர ஜடேஜாவும் தான் டான்ஸ் ஆட வேண்டியுள்ளது.

நடிப்பு

நடிப்பு

கிரிக்கெட் தவிர படங்களில் நடிப்பதிலும் பிராவோ ஆர்வமாக உள்ளார். அவர் ஏற்கனவே உலா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் வாய்ப்புகள் கிடைத்தால் தான் நடிக்கத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லுங்கி டான்ஸ்

லுங்கி டான்ஸ்

ரிங்கா ரிங்கா மற்றும் லுங்கி டான்ஸ் ஆகியவை தனக்கு பிடித்த பாடல்கள் என்று கூறியுள்ளார் பிராவோ. அவர் சென்னையில் பிராவோ நடனப் பள்ளி துவங்கவும் திட்டமிட்டுள்ளார்.

Story first published: Tuesday, May 12, 2015, 16:00 [IST]
Other articles published on May 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+