Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே எந்த வீரர், வீராங்கனையும் செய்யாத மெகா டி20 ரெக்கார்டு.. பிரேசில் வீராங்கனை உலக சாதனை

கபோரோன்: சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரோ அல்லது வீராங்கனையோ செய்யாத ஒரு மாபெரும் சாதனையை பிரேசில் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லாரா கார்டோசோ செய்து காட்டியுள்ளார். ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

போட்ஸ்வானாவில் உள்ள கபோரோன் மைதானத்தில் ஏப்ரல் 9 அன்று பிரேசில் மற்றும் லெசோத்தோ மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி-20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் என்ற சிறப்பான ஸ்கோரை பதிவு செய்தது.

Brazil s Lara Cardoso Creates History with Record-Breaking 9-Wicket Haul in Women s T20I
Photo Credit:

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி லெசோத்தோ அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணிக்கு 21 வயதான பிரேசில் வேகப்பந்து வீச்சாளர் லாரா கார்டோசோ சிம்ம சொப்பனமாக மாறினார். தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக்கட்டு போல சரித்தார்.

அவர் மொத்தம் 3 ஓவர்கள் மட்டுமே வீசி வெறும் 4 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் லெசோத்தோ அணி வெறும் 13 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை லாரா கார்டோசோ தன் வசப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு ஆடவர் மற்றும் மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி-20 போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாக பூட்டான் வீரர் சோனம் யேஷே படைத்த சாதனையே முதலிடத்தில் இருந்தது. அவர் கடந்த 2025 டிசம்பரில் மியான்மர் அணிக்கு எதிராக 7 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதேபோல மகளிர் டி-20 போட்டிகளில் இந்தோனேசியாவின் ரோமாலியா 2024ல் மங்கோலியாவுக்கு எதிராக ரன் ஏதும் கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த அனைத்து சாதனைகளையும் லாரா கார்டோசோ அசாதாரணமாக முறியடித்துள்ளார்.

முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளைப் பொறுத்தவரை ஆடவர் டி-20 போட்டிகளில் இந்தியாவின் தீபக் சாஹர் 2019ல் வங்கதேசத்துக்கு எதிராக 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 9, 2026, 21:38 [IST]
Other articles published on Apr 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+