Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

40 அடியில் கட் அவுட்.. நெய்மரை எட்டிய கேரளா ரசிகர்களின் செயல்.. நன்றி கூறி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!

திருவனந்தபுரம்: கேரளாவில் 40 அடியில் கட் அவுட் வைத்த ரசிகர்களுக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து ஃபீவர் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதவுள்ள போட்டிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

கால்பந்து உலகக்கோப்பையை வழக்கத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கால்பந்து விளையாட்டு ஒரு கலாச்சார அடையாளம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்களின் பேரணி

ரசிகர்களின் பேரணி

அந்த வகையில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி தினத்தன்று கேரள மாநிலம் கொல்லத்தில் ரசிகர்களின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேரணியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணி ரசிகர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

கேரளா ரசிகர்கள்

கேரளா ரசிகர்கள்

இதுமட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள பல வீடுகளில் மஞ்சள், வெள்ளை மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளன. இவை பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணியை குறிப்பதாகும். அதேபோல் சமகாலத்தின் கால்பந்து ஜாம்பவான்களான லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகிய வீரர்களுக்கு மிகப்பெரிய கட் அவுட்டுகளை வைத்து மிரட்டினர்.

40 அடி கட் அவுட்

40 அடி கட் அவுட்

கேரளாவில் குருங்காட்டு கடவு ஆற்று பகுதியில் லயோனல் மெஸ்ஸிக்கு 30 அடியில் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருந்தனர். கேரள கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தை கண்டு உலகமே வியந்தது. இதனிடையே மெஸ்ஸிக்கு கட் அவுட் வைத்தால்,பொங்கி எழுந்த பிரேசில் ரசிகர்கள், அருகிலேயே நெய்மருக்கு 40 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது.

நன்றி கூறிய நெய்மர்

நன்றி கூறிய நெய்மர்

கேரள ரசிகர்களின் கட் அவுட் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் வைக்கப்பட்ட கட் அவுட் புகைப்படத்தைப் பகிர்ந்து, "உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் அன்பு இருக்கிறது. மிக்க நன்றி, கேரளா, இந்தியா" என நெய்மர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேகமாக பரவும் நெய்மர் பதிவு

வேகமாக பரவும் நெய்மர் பதிவு

இந்தப் படத்தில் நெய்மரின் கட் அவுட்டுடன் தந்தையும், அவரது குழந்தையும் நெய்மர் பெயர் பொறித்த ஆடையுடன் இருக்கின்றனர். நெய்மரின் இந்த பதிவு கேரளா ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. மேலும், ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் பிரேசில் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 17, 2022, 18:30 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+