For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கால்பந்தாட்ட வீரர்களும், அவர்களின் காதல் பந்துகளும்…!

சாவோ பாலோ: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் பிரேசிலில் இனிதாக துவக்கி விட்டன.

அதே நேரத்தில், கால் பந்தாட்ட வீரர்கள் களத்தில் ஸ்கோர் செய்கிறார்களோ இல்லையோ, கால்பந்தாட்ட களத்திற்கு வெளியில் நன்கு ஸ்கோர் செய்கிறார்கள்.

இதோ அது போன்ற சில வீரர்களின் ஹாட்டான காதலிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.

கால்பந்தட்டத்தில் மட்டும் அல்ல, காதல் பந்தாட்டத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் இந்த காதலிகளின் பட்டியல் காட்டுகின்றது.

யோலாந்தே ஸ்னைடர் கபா

ஸ்பானிஷ் நடிகை, டிவி தொகுப்பாளினி, மாடல் என பல்வேறு முகங்களைக் கொண்டு திகழ்கிறார் இவர். மேலும், "ஃப்ரீ எ கேர்ள்" என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.வெஸ்லே ஸ்னைடர் மற்றும் யோலாந்தே கபா 2009 ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர்.சினிஜ்டெர் எந்த அளவிற்கு யோலாந்தேவை காதலிக்கிறார் என்பதற்கு அவர் உடலில் உள்ள யோலாந்தே முகத்தின் டாட்டுவே சாட்சி.

லெனா ஜெர்க்

இவர் ஒரு ஜெர்மன் மாடல் மற்றும் டிவி தொகுப்பாளினி.இவர்தான் கடந்த 2011இல் இருந்து சமி கேதிராவின் காதலியாக உள்ளார்.

சாரா கார்பனேரா

இவரும் ஒரு ஸ்பானிஷ் டிவி தொகுப்பாளினி மற்றும் விளையாட்டு செய்திகளை தரும் பத்திரிக்கையாளராக உள்ளார்.கார்பனேரா "உலகின் மிக கவர்ச்சியான பத்திரிக்கையாளர்" என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் ஸ்பானிஷ் மொழி டிவியின் தொகுப்பாளினியாகவும் உள்ளார்.அதற்கு காரணம் புகழ்பெற்ற வீரர் இகார் காசில்லாஸின் காதலி இவர் என்பதுதானாம்.

சாம் குக்

இக்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவர்ச்சிகரமான மாடல்.மான்செஸ்டரைச் சேர்ந்தவர்.சன் பத்திரிக்கையின் மூன்றாம் பக்கத்தில் இடம்பெறக்கூடிய பிரபலமான கவர்ச்சி மாடல்.2006 இல் நடந்த சன் பத்திரிக்கையின் மூன்றாம் பக்க மாடல்களுக்கு இடையில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்றவர்.ஹாட் ஷாட்ஸ் கேலண்டரிலும் இடம் பெற்றிருக்கிறார்.இவரும், மான்செஸ்டர் கால்பந்து அணியின் கிரிஸ் ஸ்மைலிங்கும் சிலகாலம் தொடர்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டோனெல்லா ரொக்குஸோ

அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் காதலியாக இருந்த இவர் 2012 வாழ்க்கையில் இணைந்தனர்.தற்போது இந்த ஜோடிக்கு தய்கோ மெஸ்ஸி என்ற குழந்தை உள்ளது.

எட்ருனே கார்சியா அல்மாக்ரோ

இவர் ஒரு ஸ்பானிஷ் பாப் பாடகி, நடிகை, டிவி தொகுப்பாளர்.மான்செஸ்டரின் கோல் கீப்பர் டேவிட் டி கியாவின் காதலி.

இரினா ஷயக்

ரஷ்ய மாடலான இவர், பல விளையாட்டு பத்திரிக்கைகளில் கவர்ச்சிகரமான நீச்சல் உடையுடன் போஸ் குடுத்திருக்கின்றார்.போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனம் கவர்ந்தவர்.

ஷகிரா

கால்பந்து வட்டாரத்தில் பிரபலமான கவர்ச்சி பாப் பாடகி இவர்.பார்சிலோனாவின் ஜெரார்ட் பிக்கின் கேர்ள்பிரண்ட் இந்த கவர்ச்சிப்புயல். மிகவும் பிரபலமான "வக்கா வக்கா" பாடலை பாடியவர் இவர்தான் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே.

Story first published: Thursday, June 12, 2014, 16:52 [IST]
Other articles published on Jun 12, 2014
English summary
Footballers do score on the pitch, but they are good at scoring off the pitch well. Here is a list of hottest football wags one cannot afford to miss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+