For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படி ஒரு ஹாட்ரிக்.. இப்படியும் ஒரு ஹாட்ரிக்: இங்கிலாந்து பவுலருக்கு இப்படி ஒரு சோதனை

By Veera Kumar

வெலிங்டன்: கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்த இங்கிலாந்தின் ஸ்டீவன் ஃபின் பந்து வீச்சில் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இன்னும் சொல்லப்போனால் ஹாட்ரிக்கை தாண்டி மேலும் ஒரு சிக்சரையும் எக்ஸ்டாவாக விளாசி அந்த ஓவரையே ஃபின் வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்துவிட்டார் மெக்கல்லம்.

கடந்த சனிக்கிழமை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, மோதியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த நிலையில், கடைசி ஓவரை வீச ஸ்டீவன் ஃபின் வரவழைக்கப்பட்டார்.

கடைசி மூன்று பந்துகளில் விக்கெட்

கடைசி மூன்று பந்துகளில் விக்கெட்

முதல் மூன்று பந்துகளும் ரன் எடுக்கப்பட்ட நிலையில், 4வது பந்தில் பிராடிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஹாடினும், 5வது பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் மேக்ஸ்வெலும், கடைசி பந்தில் ஜேம்ஸ் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல், ஜான்சனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

7வது ஹாட்ரிக் சாதனை

7வது ஹாட்ரிக் சாதனை

எனவே ஆட்டத்தின் கடைசி மூன்று பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஃபின். நடப்பு உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக் சாதனை, முதல் நாளிலேயே நிகழ்த்தப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து பவுலர் எடுத்த முதல் ஹாட்ரிக் அதுவாகும். மொத்தத்தில் அது 7வது ஹாட்ரிக் சாதனை.

ஹாட்ரிக் சிக்ஸ்

ஹாட்ரிக் சிக்ஸ்

ஆனால் அதே ஸ்டீவன் ஃபின் இன்று பட்டபாட்டை பார்க்க வேண்டுமே. நியூசிலாந்தின் மெக்கல்லத்திற்கு பந்துபோட வந்துவிட்டு படாதபாடுபட்டுவிட்டார். ஆம்.. ஃபின் வீசிய 2வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார் மெக்கல்லம். அத்தோடுவிடுவார் என்று பார்த்தால், அடுத்த பந்தையும் சிக்சர் தூக்கி, ஃபின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் சிக்சர் விளாசினார்.

10 பந்தில் 44 ரன்கள்

10 பந்தில் 44 ரன்கள்

மொத்தத்தில் இன்றைய போட்டியில், ஃபின் 2ஓவர்கள்தான் வீசினார். ஆனால் அள்ளிக் கொடுத்த ரன்களோ 49. ஃபின் வீசிய 12 பந்துகளில் 10 பந்துகளை மெக்கல்லம்தான் எதிர்கொண்டார். இந்த பத்தே பந்துகளில் மட்டும் 2 பவுண்டரி, 6 சிக்சர் உதவியுடன் 44 ரன்களை குவித்தார் மெக்கல்லம். 2 பந்துகள் மட்டுமே ரன் எடுக்காமல் கழிந்தது.

Story first published: Friday, February 20, 2015, 14:16 [IST]
Other articles published on Feb 20, 2015
English summary
Finn's opening two overs were ransacked by McCullum to 49 runs. McCullum plundered Finn for 44 runs from his 10 balls (2x4, 6x6, 2 dot balls).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+