எவரெஸ்ட்ல ஏறின மாதிரி என்ன கொண்டாட்டம்.. கிளப் மேட்சில் சதம் அடித்த வார்னர் அட்டகாசம்
சிட்னி : டேவிட் வார்னர் தற்போது ஓராண்டு தடைக் காலத்தில் இருக்கிறார். எனினும், சில வெளிநாட்டு டி20 தொடர்கள் மற்றும் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தார்.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிளப் கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்று ஆடி வருகின்றனர்.
இவர்கள் ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. இது போன்ற கிளப் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடி தேசிய அணியில் அவர்கள் இடம் பிடித்து விடுவார்கள் என்ற ஊகமும் உள்ளது.

சதம் அடித்த வார்னர்
டேவிட் வார்னர் ராண்ட்விக் பீட்டர்ஷாம் கிளப் அணிக்காக ஆடி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்த அவர், அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.

ஓவர் கொண்டாட்டம்
சதம் அடித்த வார்னர் அதை பெரிய சாதனை போல கொண்டாடினார். சிலர் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், சிலர் இதை வைத்து கேலி செய்து வருகிறார்கள்.

கிளப் அணிக்கே இப்படியா?
சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அனுபவ வீரரான டேவிட் வார்னர், ஒரு கிளப் போட்டியில் அடித்த சதத்துக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா? என்பதே கேலி செய்பவர்களின் வாதமாக உள்ளது.
கலாய்த்த மெக்கலம்
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மெக்கலம், ட்விட்டரில் வார்னரை கலாய்த்துள்ளார். "இந்த கொண்டாட்டம் எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய பின் சர் எட்மன்ட் ஹில்லாரியின் செய்த கொண்டாட்டத்திற்கு இணையாக உள்ளது" என கேலி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications