Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரே ஒரு காரணம் தான்... இந்தியாவை விட நியூ,-க்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.. பிரட்லீ விளக்கம்!

சவுத்தாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நியூசிலாந்துக்கு ஏன் சாதகமாக இருக்கும் என பிரட்லீ விளக்கியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வருகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்திய அணி சுற்றுப்பயணம்

இந்திய அணி சுற்றுப்பயணம்

மும்பையில் 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்த இந்திய அணி நேற்று தான் இங்கிலாந்து சென்றடைந்தது. தற்போது சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதான ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர்கள் அங்கு 10 நாட்கள் குவாரண்டைனில் இருக்க உள்ளனர். ஆனால் முதல் மூன்று நாட்களிலும் கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்படும். அதில் நெகட்டீவ் என முடிவு வந்தால் 4வது நாள் முதல் பயிற்சியை தொடங்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து களமானது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்று. இங்கு பேட்ஸ்மேன் முதல் சில நேரங்களுக்கு பந்தை நிதானமாக கவனித்து தான் விளையாட வேண்டும். குறிப்பாக இங்கு பந்தில் நல்ல வேகமும், ஸ்விங்கும் இருப்பதால், பந்துவீச்சை பொறுத்து தான் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யப்படும் எனக்கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் இங்கிலாந்து பிட்ச் நியூசிலாந்துக்கு தான் சாதகமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நியூ, சாகதம்

நியூ, சாகதம்

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரட் லீ, நியூசிலாந்து வீரர்களுக்கு அவர்களது நாட்டில் இருக்கும் களத்தை போன்றே இருப்பது போன்றே இங்கிலாந்து இருக்கிறது. அங்குள்ள பந்தின் வேகம், பந்தின் டேர்னிங் ஆகியவை நியூசிலாந்துக்கு பழக்கப்பட்டவையாகும். இதன் காரணமாக தான் இந்த போட்டியில் இந்தியாவை விட அவர்கள் ஒரு படி மேலே உள்ளனர்.

பவுலிங் முக்கியம்

பவுலிங் முக்கியம்

பேட்டிங்கை பொறுத்தவரை இரு அணிகளுமே சம பலத்துடன் உள்ளன. இரு அணிகளிலும் ஸ்விங் பந்துகளை திறம்பட கையாலும் வீரர்கள் உள்ளன. ஆனால் இந்த களத்தில் பவுலிங் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ, அது தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 4, 2021, 21:06 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+