Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இன்னும் எதுவும் முடியல.. இந்தியாவுக்கு சிக்கல் வருது”.. 3வது டெஸ்ட் போட்டி.. பிரட் லீ எச்சரிக்கை!

மும்பை: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 போட்டிகளில் வென்றுவிட்டோம் என இந்திய அணி மகிழ்ச்சியடைய வேண்டாம், இனி தான் பிரச்சினையே இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ளது.

அதுவும் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட்

ஆஸ்திரேலியா டெஸ்ட்

தொடர்ச்சியாக 3 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் 2 வெற்றிகளை பெற்று கோப்பையை தக்கவைத்துள்ளது. இனி வரும் போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்த தொடர் சமனில் மட்டுமே முடியும். ஆனால் சுழலுக்கு சாதகமான இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது ஆஸ்திரேலியாவுக்கு கடினமான ஒன்றாகும்.

பிரட் லீ வார்னிங்

பிரட் லீ வார்னிங்

இந்நிலையில் இந்தியாவுக்கு பிரட் லீ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். ஆஸ்திரேலிய அணியில் நாதன் லைன் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அவருக்கு பின்னர் டாட் மர்ஃபியும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்க வந்துவிட்டார். அறிமுக போட்டியிலேயே இந்திய களத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கம் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியா படு மோசமான தோல்வியை பெற்றிருக்கும். ஆனால் 7 விக்கெட்களை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் மர்ஃபி ஈர்த்திருந்தார். எனவே 3வது டெஸ்டில் நாதன் லைன் மற்றும் மர்ஃபி இணைந்து இந்தியாவுக்கு சவால் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். பிட்ச்-ஐ நன்கு புரிந்துக்கொண்டுள்ளதால் நல்ல போட்டியை பார்க்கலாம்.

இன்னும் முடியல

இன்னும் முடியல

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் சேப்டர் மட்டுமே முடிந்திருக்கிறது. இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றி கண்டு தொடரை இழக்காமல் பார்த்துக்கொள்ளும் என பிரட் லீ கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதியன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Story first published: Tuesday, February 21, 2023, 16:13 [IST]
Other articles published on Feb 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+