Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரரின் ஃபிட்னஸை பாருங்க.. அந்த கொண்டாட்டம் மட்டும் வேண்டாமே.. பிரெட் லீ கலகலப்பு!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் ஃபிட்னஸ் குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிரெட் லீ வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் கொண்டாட்டத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரெட் லீ, சமகால கிரிக்கெட்டில் ஜடேஜா மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் பாராட்டி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 516 ரன்களை விளாசி இருந்தார். மான்செஸ்டர் டெஸ்டில் 2வது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதம் விளாசிய ஜடேஜா, லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடி அசத்தினார். அதேபோல் 36 வயதிலும் ஜடேஜா முழு ஃபிட்னஸ் உடன் ஆடியது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Brett Lee Praises Ravindra Jadeja s Fitness and All-Round Brilliance

இந்த நிலையில் ஜடேஜா தொடர்பாக பிரெட் லீ பேசுகையில், ரவீந்திர ஜடேஜா காயம் அடைவதற்கு ஒரேயொரு வாய்ப்பு அவரின் கொண்டாட்டம் மட்டும்தான். அவர் பேட்டை சுழற்றும் போது, அவரின் கைகளில் காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் அந்த கொண்டாட்டம் எனக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் 36 வயதில் இவ்வளவு ஆக்ரோஷமான கொண்டாட்டம் தேவையில்லை.

இந்திய அணிக்காக மொத்தமாக 85 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். நிச்சயமாக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடுவார். என்னை பொறுத்தவரை 100 டெஸ்ட் போட்டிகளில் எந்த வீரர் விளையாடினாலும், அவர் ஒரு GOAT. ரவீந்திர ஜடேஜா ஒரு சூப்பர் ஸ்டார் வீரர். நீண்ட நாட்களாக ஜடேஜாவின் ஆட்டம் உச்சத்தில் இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிடுவார்.

ஒரு கிரிக்கெட் வீரருக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தும் ஜடேஜாவிடம் இருக்கிறது. ஜடேஜா தனது அடிப்படைகளை சரியாக செய்து வருகிறார். பேட்டிங் டெக்னிக்கை எளிதாக வைத்துக் கொள்கிறார். பவுலிங்கின் போது சாதாரணமாக ஓடி வந்து சரியான லைன் மற்றும் லெந்தில் வீசி வருகிறார். அதேபோல் ஃபீல்டிங்கின் போது கிரவுண்டை எளிதாக கவர் செய்கிறார்.

ஃபீல்டிங்கில் சிறந்த வீரர் ஜடேஜா தான். 36 வயதானாலும், அவர் தான் பெஸ்ட். களத்தில் ஒரு பொழுதுபோக்குடன் இருக்கிறார். ஃபிட்னஸ் தரத்தை எந்த அளவிற்கு வைத்தாலும், ஜடேஜா உச்சத்திற்கு வந்துவிடுவார். அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் எப்படியாவது ஆட வேண்டும் என்பதே ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 17, 2025, 23:08 [IST]
Other articles published on Aug 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+