எனது 10 வயது மகனுக்கு பிடித்த பேட்ஸ்மேன் இவர்தான்.. பிரெட் லீ சொல்வதை பாருங்கள்
சிட்னி: உலகின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் பிரெட்லீயின் 10 வயது மகனுக்கு விராட் கோஹ்லிதான் ஃபேவரைட் பேட்ஸ்மேனாம்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருடன் இணைந்துள்ள பிரெட்லி, நிகழ்ச்சியின்போது கூறுகையில், எனது 10 வயது மகனுக்கு பிடித்த பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி என்றார்.
ஒருமுறை கோஹ்லியிடம் கை குலுக்கியவாறு இதை தெரிவித்தேன். உடனே நெகிழ்ந்து போன கோஹ்லி, தனது டெஸ்ட் ஜெர்சி ஒன்றில், கையெழுத்திட்டு எனது மகனுக்கு பரிசளித்தார் என்றார் பிரெட்லீ.

கிரிக்கெட் வீரர் மகன்
பிரெட்லி விளையாடிய காலகட்டத்தில் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா, மைக்கேல் ஹஸ்சி போன்ற பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் அவரது மகனுக்கு இவர்களைவிட கோஹ்லியைதான் பிடித்துள்ளது.

கஷ்டமப்பா
முன்பு ஒருமுறை பிரெட் லி அளித்த பேட்டியில், கோஹ்லிக்கு பந்து வீசுவது சிரமமான விஷயம். பந்து வீசும் முன்பு நானாக இருந்தால் வேண்டிக்கொண்டுதான் ஓடி வருவேன். ஆப்ஸ்டெம்புக்கு வெளியே யார்க்கர் வீசிதான் அவரை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

எல்லா பக்கமும் உதை
கோஹ்லி 360 டிகிரி பேட்ஸ்மேன். எல்லா திசைகளிலும் அவர் பலமான வீரர் என்பதால் எந்த பக்கம் பந்தை போட்டாலும் ரன் சேகரித்துவிடுவார். கோஹ்லியை அவுட் செய்வதைவிட ரன் சேகரிக்காமல் தடுப்பதில்தான் நானாக இருந்தால் கவனம் செலுத்துவேன். அதாவது முடியுமா என்று முயற்சிப்பேன்.

தலைசிறந்த பேட்ஸ்மேன்
விராட் கோஹ்லிக்கு கிரிக்கெட் மீது காதல் உள்ளது. அதேநேரம் தனது எல்லையை கடக்காமல் ஆக்ரோஷமாக ஆடுகிறார். இதுதான் அவரது வெற்றிக்கு காரணம். தற்போதைய நிலையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லிதான் என்றார்.


Click it and Unblock the Notifications