For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் - கோலி இருவரையும் ஒப்பிடுவது சரியா? சூப்பர் பதில் சொன்ன பிரையன் லாரா

பெங்களூரு : வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய பிரையன் லாரா, இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் கோலி - சச்சின் ஒப்பீடு பற்றியும் பேசியுள்ளார்.

கோலி மற்றும் சச்சின் இருவரும் வேறு வேறு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இவர்களை ஒப்பிடுவது தவறான ஒன்று என கூறி இருக்கிறார் லாரா.

கோலி சூப்பரப்பு

கோலி சூப்பரப்பு

கோலி பற்றி பேசிய லாரா, "கோலி இன்று மிக அற்புதமாக செயல்படுகிறார். அவர் ரன் குவிக்கும் வேகம், அவரது உடற்தகுதி, பல்வேறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் முக்கியத்துவம் எல்லாமே சிறப்பாக உள்ளது. இந்த விளையாட்டுக்கு இப்போது ஒரு தலைவன் இருப்பது பார்க்க நன்றாக உள்ளது" என்றார்.

ஒப்பீடு எல்லாம் முக்கியம் இல்லை

ஒப்பீடு எல்லாம் முக்கியம் இல்லை

கோலி - சச்சின் ஒப்பீடுகள் பற்றி பேசினார் லாரா. "என்னையும் சச்சினையும் பற்றி நிறைய ஒப்பீடுகளை நீங்கள் படிக்கலாம், கேள்விப்படலாம். ஆனால், அது எதுவுமே எங்களுக்கு முக்கியம் இல்லை. கோலியும் இது போன்ற ஒப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார் என நம்புகிறேன்" என கூறினார்.

பங்களிப்பு தான் முக்கியம்

பங்களிப்பு தான் முக்கியம்

"அனைவரும் இந்த விஷயத்தில் தவறாகவே முடிவு செய்கிறார்கள். எல்லோரும் வேறு வேறு காலங்களில் வளர்ந்தோம். நீங்கள் ஒருவர் என்ன பங்களிப்பு அளிக்கிறார் என்பதை தான் பாராட்ட வேண்டும்" எனவும் கூறினார் லாரா.

ஒப்பீடுகள் பற்றி லாரா கேள்வி

ஒப்பீடுகள் பற்றி லாரா கேள்வி

"எனது காலத்தில் டிராவிட், டெண்டுல்கர், காலிஸ், ரிக்கி பாண்டிங் எல்லோரும் விதவிதமான வகையில் பங்களிப்பை அளித்தோம். நாம் இங்கே உட்கார்ந்து கொண்டு ஒருவர் விவியன் ரிச்சர்ட்ஸ்-ஐ விடவோ, கார்பீல்ட் சோபர்ஸ்-ஐ விடவோ உயர்ந்தவர் என கூற முடியுமா?" என ஒப்பீடுகள் தவறு என கூறினார் லாரா.

Story first published: Sunday, November 4, 2018, 14:46 [IST]
Other articles published on Nov 4, 2018
English summary
Brian Lara talks about comparing Sachin Tendulkar and Virat Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+