Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். 2022 சீசனில் களமிறங்குகிறார் பிரைன் லாரா.. எதிர்பாராத அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐதராபாத்: ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மிகவும் பரம்மாண்டமாக 10 அணிகளுடன் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது தயார்படுத்தி கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

லக்னோ அணி ஆன்டி ஃபிளவரை பயிற்சியாளராகவும், கவுதம் கம்பீரை அணியின் மெண்டராகவும் நியமித்தது.

மேலும் ஏலத்திற்கு முன்பே வீரர்களை வளைத்து போட லக்னோ அணி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இம்முறை இளம் வீரர்களுக்கு தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை குறிவைத்து, அவர்களை சென்னைக்கு அழைத்து பேட்டிங் திறமைகளை சோதித்து வருகிறது.5 முறை சாம்பியனான மும்பை அணி தங்களது நடவடிக்கைகளை வெளியே சொல்லாமல் இருந்த வருகிறது.

ஐபிஎல் தொடரில் லாரா

ஐபிஎல் தொடரில் லாரா

இநத நிலையில், ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவானான பிரைன் லாரா களமிறங்குகிறார். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் பயிற்சியாளர் என்ற பொறுப்பு பிரைன் லாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்டேயின் களமிறங்குகிறார்.

மற்ற பயிற்சியாளர்கள்

மற்ற பயிற்சியாளர்கள்

சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் மீண்டும் செயல்பட உள்ளார். ஃபில்டிங் பயிற்சியாளராக ஹேமாங் பதானியும், உதவி பயிற்சியாளராக சைமின் காடிச்சும், தலைமை பயிற்சியாளராக டாம் மூடியும் செயல்பட உள்ளனர். டேவிட் வார்னர் ஐதராபாத் அணியில் இருந்து நீக்கப்பட்டதால், வில்லியம்சனே கேப்டனாக தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரைன் லாராவின் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

IPL Auction likely to be held in February! BCCI to conduct meeting amid Omicron concerns
மாற்றங்கள் பலன் தருமா?

மாற்றங்கள் பலன் தருமா?

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் லாரா, லாரா எப்போதும் அதிரடியாக ஆடக் கூடியவர். இதனால் அவரது வருகை நிச்சயம் ஐதராபாத் அணிக்கு நன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 முறை பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எனினும் கடந்த ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதனால் புதிய மாற்றங்களுடன் ஐதராபாத் அணி இம்முறை களமிறங்குகிறது.

Story first published: Thursday, December 23, 2021, 17:04 [IST]
Other articles published on Dec 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+