உலக கோப்பை பைனலில் இந்தியா Vs பாக்…. கட்டாயம் இந்தியா தான் சாம்பியன்... அடித்து சொல்லும் அவர்
மும்பை:உலக கோப்பை இறுதியாட்டத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதும். ஆனால், கோப்பையை இந்தியா தட்டிச் செல்லும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் பிரைய்ன் லாரா கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்டது. அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக உள்ளது. ஸ்மித், வார்னர் இல்லாமல் ஓராண்டாக திணறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது.

2 உலக கோப்பை
ஸ்மித், வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை அவ்வளவு எளிதாக யாரும் எடை போட்டுவிட முடியாது.

சிறந்தவையே
மேற்கிந்திய தீவுகள். தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்தவையே. ஒவ்வொரு அணியுமே வலுவாக உள்ள நிலையில், பல ஜாம்பவான்களும் யாருக்கு உலக கோப்பை என்று கருத்து கூறி வருகின்றனர்.

கோப்பை யாருக்கு?
பெரும்பான்மையானவர்கள் இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று கூறி வருகின்றனர். அதே கருத்தை தான் பிரைய்ன் லாராவும் சொல்கிறார்.. ஆனால் கொஞ்சம் மாத்தி சொல்கிறார்.

லாராவின் கணிப்பு
அவர் கூறியதாவது:
உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத வாய்ப்புள்ளது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி பலமான அணி. அதனால் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

மேற்கிந்திய தீவுகள்
2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி வென்றதில் ஆச்சரியம் இல்லை.மேற்கிந்திய தீவுகள் அணி சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அந்த அணி வெற்றியை பறிக்கக்கூடிய ஒன்று.

இறுதி போட்டியில் யார்?
இந்திய அணி உலகின் எந்த பகுதியிலும் சிறப்பாக ஆடக்கூடிய அணி. 2 ஆண்டுகளுக்கு முன், சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதேமாதிரி இறுதி போட்டியில் மோதினால் பார்க்க சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications