Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, ஆஸ்திரேலியா இல்லை.. 2027 உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்.. லாரா கணிப்பு

ஜோகன்னஸ்பர்க்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் அதில் அவர் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளின் பெயர்களையும் கூறவில்லை.

14-வது ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2027 அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக்கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரையன் லாரா, பலம் வாய்ந்த இந்திய அணியையும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் தவிர்த்து விட்டு, தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்துள்ளார்.

Brian Lara Predicts Winner Of 2027 ODI World Cup Rejecting India And Australia

இதுகுறித்து பிரையன் லாரா பேசுகையில், "தென் ஆப்பிரிக்கா சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பையை நடத்துகிறது. சொந்த நாட்டு ஆடுகளங்களின் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். எனவே இம்முறை உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள எனது முதன்மை அணியாக தென் ஆப்பிரிக்காவையே நான் தேர்வு செய்கிறேன்" என்று தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா கடைசியாக 2003-ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை நடத்தியிருந்தது. அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரை நடத்த உள்ளது. இதுவரை அந்த அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதில்லை.

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் களமிறங்கத் தயாராகி வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவும் வலிமையாக உள்ளது. ஆனால் இந்த இரு முன்னணி அணிகளையும் தேர்ந்தெடுக்காமல் தென் ஆப்பிரிக்காவை லாரா தேர்வு செய்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே-வுக்கு வருவதில் ஜாகீர் கானால் முட்டுக்கட்டை.. மும்பை இந்தியன்ஸ்க்கு சிக்கல்

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே-வுக்கு வருவதில் ஜாகீர் கானால் முட்டுக்கட்டை.. மும்பை இந்தியன்ஸ்க்கு சிக்கல்

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்துப் பேசிய லாரா, "தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்து உலகக்கோப்பைக்கான நேரடி தகுதியை இழந்தாலும், தகுதிச்சுற்று மூலமாக உள்ளே நுழைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையில் மற்ற அணிகளுக்கு கடும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

Story first published: Tuesday, October 6, 2026, 10:47 [IST]
Other articles published on Oct 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+