Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா மனசுய்யா அவருக்கு... இத சொல்றதுக்கு பெரிய மனசு வேணும்... சூப்பர்!

டெல்லி : மேற்கிந்திய ஜாம்பவான் ப்ரையன் லாரா சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவுட்டாகாமல் 400 ரன்களை எடுத்த அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் அவர் எடுத்துள்ள ஒரு முடிவு பத்திரிகையாளர் க்ளேடன் முர்செலோவின் பாராட்டை பெற்றுள்ளது.

சிறப்பான பிரையன் லாரா

சிறப்பான பிரையன் லாரா

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா அந்த அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ஸ்கோர் அடித்தவர். அவர் தன்னுடைய கேரியரில் 11,953 ரன்களை 52.89 சராசரியில் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களையும் 9 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார்.

அவுட்டாகாமல் 400 ரன்கள்

அவுட்டாகாமல் 400 ரன்கள்

மேலும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2004ல் அவுட்டாகாமல் 400 ரன்களை அடித்துள்ளார். இந்த சாதனை சர்வதேச அளவில் இதுவரை மற்ற வீரர்களால் முறியடிக்கப்படாமல் உள்ளது. மேலும் கடந்த 1994ல் அதே இங்கிலாந்துக்கு எதிராக 375 ரன்களை அவர் அடித்துள்ளார்.

63 அரைசதங்கள்

63 அரைசதங்கள்

350 ரன்களுக்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் இருமுறை அடித்துள்ள ஒரே வீரர் என்ற பெருமை இதன்மூலம் அவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல ஒருநாள் போட்டிகளிலும் 10,405 ரன்களை அவர் அடித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடங்கும்.

பலன்பெறும் வீரர்கள்

பலன்பெறும் வீரர்கள்

கடந்த 2007ல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து கிரிக்கெட் குறித்த விமர்சனங்களை அவர் வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் பல கிரிக்கெட் வீரர்கள் அவரின் ஆலோசனையை பின்பற்றி நடக்கும் சூழலும் காணப்படுகிறது.

சிறப்பான முடிவு

சிறப்பான முடிவு

இந்நிலையில் அவருடைய 52வது பிறந்தநாள் இன்று. அதை கொண்டாடி மகிழ அவருக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் உலக அளவில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவது சரியாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். இதை பத்திரிகையாளர் க்ளேடன் முர்செலோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் மிகப்பெரிய மனது ஆச்சர்யத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, May 2, 2021, 15:29 [IST]
Other articles published on May 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+