Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி அடித்த ஆஸி. வீரர்.. பதிலடி கொடுத்த முகமது சிராஜ்.. ஒரே ஒரு மாற்றத்தில் தட்டி தூக்கினார்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் என 4 வேகப்பந்துவீச்சாளர்களை இந்தியா களமிறக்கியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் பந்து எப்போதுமே பேட்டிற்கு நன்றாக வரும். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால் ஹர்திக் பாண்டியாவுக்கு இது சாதகமாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, பல ஆல் ரவுண்டர்களுடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். குறிப்பாக 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் உளளனர்.

அதிரடி ஆல்ரவுண்டர்கள்

அதிரடி ஆல்ரவுண்டர்கள்

மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இந்த தொடரில் பந்துவீசமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கேமிரான் கிரீன் ஆகியோர் உள்ளனர். பேட்டிங் வரிசையில் 8வது இடத்தில் இருப்பவர் கூட அதிரடியை காட்டுவார். இதனால் இந்திய அணி விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியா பிளான்

இந்தியா பிளான்

இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் சிராஜ்,ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே முகமது சிராஜ் தனது தாக்கத்தை ஏற்படுத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், அபாயகரமான வீரர் என்பதால் அவரை விரைவில் வீழ்த்த வேண்டியது முக்கியம்.

டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட்

சிராஜ் வீசிய 4வது பந்திலேயே டிராவிஸ் ஹேட் பவுண்டரி விரட்டினார். அந்த பந்தை 138 கிமீ வேகத்தில் சிராஜ் வீசினார்.இதனையடுத்து முகமது சிராஜ் அடுத்த பந்தை 140 கிமீ வேகத்தில் வீச, அந்த பந்தை டிராவிஸ் ட்டால் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கடைசி பந்தை இன்னும் வேகமாகவும், லெங்தில் சிறிய மாற்றத்துடன் சிராஜ் வீசினார்.

சிராஜ் விக்கெட்

சிராஜ் விக்கெட்

இதனை அடிக்க முயன்ற போது பந்து பேட்டில் இன்சைட் எட்ஜாகி ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனையடுத்து ஹெட் 5 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் சற்று அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த பவுண்டரிகளை அடித்தார். மும்பை மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால், 300 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்சில் அடிக்கப்படலாம்.

Story first published: Friday, March 17, 2023, 14:22 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+