கோல்டன் டக் ஆனார் பாபர் அசாம்.. முதல் பந்திலேயே அசத்திய ஆர்ஸ்தீப்.. முகமது ரிஸ்வானும் அவுட்
மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கோல்டன் டக் ஆனார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டியை காண சுமார் 1 லட்சம் ரசிகர்கள் திரண்டனர். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மெல்போர்னில் குளிர்ந்த காற்று வீசி வருவதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்தார்.

அசத்தலான முதல் ஓவர்
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், அதனை எதிர்கொள்ள முகமது ரிஸ்வான் திணறினார். ஆட்டத்தின் 5வது பந்து இடதுபுறம் ஸ்விங் ஆகி Wide சென்ற பந்தை தாண்டி பிடித்து, பவுண்டரி செல்லாமல் தினேஷ் கார்த்திக் தடுத்தார். இதனால் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

பாபர் அசாம் அவுட்
இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் , உலககோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் முதல் பந்தை வீசினார். பாபர் அசாம்க்கு இன்ஸ்விங் பந்தை வீசி, அவர் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலம் பாபர் அசாம் கோல்டன் டக் ஆனார். இதனால் பாகிஸ்தான் 1 ரன்னில் ஒரு விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

ரிஸ்வான் ஆட்டமிழப்பு
இதனைத் தொடர்ந்து, ஆர்ஸ்தீப் சிங் வீசிய தனது 2வது ஓவரில் முகமது ரிஸ்வானை 4 ரன்களில் ஆட்டமிழக்க வைத்தார். இதில் முதலில் இரண்ட இன்ஸ்விங் பந்துவீச்சை ரிஸ்வானுக்கு வீசிய ஆர்ஸ்தீப், அடுத்த பந்தை ஷாட் பாலாக வீசி வலையை விரிக்க, ரிஸ்வான் அதில் சிக்கினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

திருப்பி கொடுத்த இந்தியா
கடந்த டி20 உலககோப்பையில் இதே போன்று, முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் விக்கெட்டை இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா வீழ்த்தினார். தற்போது, அதே மாதிரி இந்திய அணி வீரர்கள் 2 விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்தி பதிலடி தந்தனர்.


Click it and Unblock the Notifications