For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பந்துகளில், 2 விக்கெட்.. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்த ஆப்கானிஸ்தான்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்டிங் தடுமாறி வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

மும்பை வான்கடேவில் நடைபெற்று வரும் 39 ஆவது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

brilliant bowling from Afghanistan destroys australia batting in icc world cup 2023

அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அவர்களுடைய அரையிறுதி சுற்று வாய்ப்பு பிரகாசமாகி விடும். இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஷாட்ரான் அபாரமாக விளையாடி 129 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எளிதில் துரத்தி விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆக்கி வெளியேற ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.இதனை அடுத்து டேவிட் வார்னர் மற்றும் மிச்சின் மார்ஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்து வந்தனர்.

அதிரடியாக விளையாட முற்பட்ட மார்ஷ் 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் நவீன் உல் ஹக் பந்தில் lbw ஆனார். இதனால் ஆஸ்திரேலிய அணி 43 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சரி டேவிட் வார்னர் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் அஸ்மதுல்லா வீசிய பந்தில் டேவிட் வார்னர் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த பந்திலே ஜோஸ் இங்கிலீஷ் டக் அவுட் ஆனார்.

இதன் மூலம் 49 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன் பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இவரும் 14 ரன்களில் ரன் அவுட் ஆனார். 15.4 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட் அளப்பருக்கு 77 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.

Story first published: Tuesday, November 7, 2023, 20:03 [IST]
Other articles published on Nov 7, 2023
English summary
brilliant bowling from Afghanistan destroys australia batting in icc world cup 2023 2 பந்துகளில், 2 விக்கெட்.. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்த ஆப்கானிஸ்தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+