Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்..177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. ஜடேஜா,அஸ்வின் அபார பந்துவீச்சு

நாக்பூர் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் பரத் ஆகியோர் அறிமுக வீரராக களமிறங்கினர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுளளதாக ஆஸ்திரேலிய அணி குற்றஞ்சாட்டியது. ஆனால் முதல் ஓவரிலேயே அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றது.

வேகப்பந்துவீச்சாளர் அபாரம்

வேகப்பந்துவீச்சாளர் அபாரம்

தொடக்க வீரர் டேவிட் வார்னர் 1 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார்கள். இதில் வார்னர் ஸ்டம்ப் வாக்கிங் சென்றது.இதே போன்று மறுமுனையில் நின்ற உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டையும் முகமது சிராஜ் எல்பிடபியூ முறையில் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 2 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் குற்றச்சாட்டு தவிடு பொடி ஆனது.

ஜடேஜா மேஜிக்

ஜடேஜா மேஜிக்

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஸ்மித் நங்கூரம் போட்டு களத்தில் நிற்க, மறுமுனையில் நின்ற மார்னஸ் லாபஸ்சேன் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்தனர். அப்போது ஜடேஜா இந்த கூட்டணியை பிரித்தார்.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

49 ரன்கள் எடுத்த நிலையில் மார்னஸ் லாபஸ்சேன், அதிரடியாக ஆட நினைத்து கொஞ்சம் இறங்கி வர, ஜடேஜா பந்தை நன்றாக திருப்பினார். இதனை கணிக்க தவறிய லாபஸ்சேன், ஸ்டம்பிட் ஆனார். பந்தை சிறப்பாக பிடித்து தோனியை போல் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்க செய்தார். இதனைத் தொடர்ந்து மாட் ரீன்ஷா களத்திற்கு வந்தார்.அப்போது மீண்டும் ஜடேஜா பந்தை மாட் ரீன்ஷாவின் காலை நோக்கி வீச, அவர் எல்பிடபிள்யூ ஆனார்.

தடுமாறிய ஆஸ்திரேலியா

தடுமாறிய ஆஸ்திரேலியா

இதன் மூலம் அடுத்தடுத்து 2 பந்தில் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஸ்மித் பவுண்டரிகளாக விளாசிய நிலையில், ஜடேஜா இம்முறை பந்தை திருப்பாமல் நேராக வீசினார். இதில் ஸ்மித் கிளின் போல்ட் ஆனார். இதனால் 84 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் 118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஜடேஜா 5 விக்கெட்

ஜடேஜா 5 விக்கெட்

இதனையடுத்து ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட முற்பட்டு ரன்களை குவித்தார்கள். அப்போது அஸ்வின் தனது மேஜிக் மூலம் அகெல்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் மீண்டும் ஆஸ்திரேலிய அணி சரிவை சந்தித்தது. ஒரு புறம், அஸ்வினும், மறுபுறம் ஜடேஜாவும் நெருக்கடியை ஏற்படுத்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Story first published: Thursday, February 9, 2023, 15:38 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+