Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023ஆம் ஆண்டின் சிறந்த கேட்ச்.. எரிமலை போல் வெடித்த சூர்யகுமார்.. ஃபில்டிங்கால் ஆஃப் செய்த நியூசி

அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் எரிமலை போல் வெடிக்க தொடங்கிய நிலையில், சிறப்பான கேட்ச் மூலம் அவர் ஆட்டமிழந்தார்.

வாழ்வா சாவா ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில், பெரிய இலக்கை நிர்ணயிக்க ஹர்திக் பாண்டியா முடிவு எடுத்தார்.

ஆனால், அதற்கு ஆப்பு அளிக்கும் விதமாக இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இருப்பினும், ராகுல் திரிபாதி அபாரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை அவர் உயர்த்தி, இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டார். மறுமுனையில் சுப்மன் கில்லும் பவுண்டரி சிக்சர் என விளாசினார்.

வெடித்த சூர்யகுமார்

வெடித்த சூர்யகுமார்

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 22 பந்தில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனையடுத்து களத்திற்கு வந்து சூர்யகுமார் யாதவ், வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என எரிமலை போல் வெடிக்க தொடங்கினார்.

அதிசயம்

அதிசயம்

சூர்யகுமார் போன்ற பேட்ஸ்மேன் இப்படி அடிக்க தொடங்கினால் களத்தில் நீங்கள் எதாவது அதிசயத்தக்க வகையில் செயல்பட்டால் தான், உங்களால், அவரை போன்ற பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த முடியும். அப்படி ஒரு அதிசயம் தான் இன்று நடைபெற்றது.

அபார கேட்ச்

அபார கேட்ச்

டிக்னர் வீசிய பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார்,அதனை தூக்கி மிட் ஆன் பகுதியில் தூக்கி அடித்தார். அப்போது அங்கிருந்து ஃபில்டரிடம் பந்து கேட்ச் ஆக வாய்ப்பில்லை தான் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த பிராஸ்வெல் ஓடி வந்து பாய்ந்து கேட்ச் பிடித்தார். இது ரிப்ளேவில் அவுட் என தெரியவந்ததை அடுத்து சூர்யகுமார் பெவிலியன் திரும்பினார். இது ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Story first published: Wednesday, February 1, 2023, 21:02 [IST]
Other articles published on Feb 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+