For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. பவுண்டரி வரை ஓடி வந்த இஷான் கிஷன்.. வேற லெவல்

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் பிடித்த ஒரு கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 41 ரன்களிலும் , இஷான் கிஷன் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 Brilliant catch from Ishan kishan made a turning point for india

இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இல்ங்கை அணியின் நிசாஙகா 1 ரன்னிலும், தனஞ்செய்ய டி சில்வா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, அசலங்கா, மெண்டிஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அசலங்கா 12 ரன்கள் எடுத்திருந்த போது, உம்ரான் மாலிக் பந்துவீச்சை தூக்கி அடித்தார். அப்போது பந்து பைன் லேக் திசையை நோக்கி சென்றது. அங்கு ஹர்சல் பட்டேல் கேட்சை பிடிக்க முயன்றார்.

அப்போது, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தன்னுடைய இடத்திலிருந்து ஓடி வந்து, அதே வேலையில் ஹர்சல் பட்டேலை பிடிக்க வேண்டாம் என்று கையை காட்டினார். பிறகு பந்தை விழும் இடத்தை கணித்து அதன் பிறகு இடத்தார். விக்கெட் கீப்பர்கள் கையுறை பயன்படுத்துவதால், கேட்ச் பிடிக்க ஏதுவாக இருக்கும்.

 Brilliant catch from Ishan kishan made a turning point for india

ஆனால் அவ்வளவு தூரம் ஓடி வந்து கேட்ச் பிடிப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. இஷான் கிஷன் இந்த கேட்சை இந்திய வீரர்கள் கொண்டாடினார். கேப்டன் ஹ்ர்திக் பாண்டியா இஷான் கிஷனை வெகுவாக பாராட்டினார். இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஃபில்டிங் சிறப்பாக அமைந்தது

Story first published: Tuesday, January 3, 2023, 22:33 [IST]
Other articles published on Jan 3, 2023
English summary
Brilliant catch from Ishan kishan made a turning point for india ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. பவுண்டரி வரை ஓடி வந்த இஷான் கிஷன்.. வேற லெவல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+