Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் மேன் போல பாய்ந்த ஜடேஜா.. அதிர்ச்சியில் நின்ற ஆஸி. வீரர்.. நெருக்கடி கொடுக்கும் இந்தியா

மும்பை : மும்பையில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

டாசை இழந்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி பனிப்பொழிவின் போது பந்துவீச வேண்டும் என்பதால், பெரிய இலக்கை நிர்ணயித்தால் தான் வெற்றி பெற முடியும்.

இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பொறுப்புடன் விளையாடி, பிறகு அதிரடியை காட்ட முயற்சி செய்தது. ரோலர் கோஸ்டர் போல் இரண்டு அணிகளுமே மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

இன்றைய ஆட்டத்தில் வார்னருக்கு பதில் தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ் விளையாடினார். மற்றொரு தொடக்க வீரர் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருக்கு ஸ்மித் நல்ல கம்பெனி கொடுத்து ரன்களை சேர்ததார்.

 மார்ஷ் அதிரடி

மார்ஷ் அதிரடி

ஸ்மித் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாண்டியாவின் பந்துவீச்சில் அபாரமாக கேஎல் ராகுலின் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபஸ்சேன்களத்திற்கு வந்து நிதானமாக விளையாடினார்.

நெருக்கடி

நெருக்கடி

மார்னஸ் லாபஸ்சேன் நல்ல பார்மில் உள்ள நிலையில், அவருடைய விக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது மார்னஸ்க்கு குல்தீப் யாதவ் ஒரே லைனில் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.

 அபார கேட்ச்

அபார கேட்ச்

இதனால் கடுப்பான மார்னஸ், ஒரு பந்தை கட் செய்தார். அப்போது பாயிண்டில் நின்று கொண்டிருந்த ஜடேஜா, சூப்பர் மேன் போல் பாய்ந்து கேட்ச் பிடித்தார்.இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதற்கு முக்கிய காரணம் இந்திய வீரர்களின் ஃபில்டிங் தான் ஆகும்.

Story first published: Friday, March 17, 2023, 16:30 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+