Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேதாளம் அஜித் போல் மாறிய டேவிட் வார்னர்..!! தெறிவிக்கவிட்டாரு..!!

பிரிஸ்பேன்: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது

இதில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு சுருண்டது.

இந்த நிலையில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தொடக்கம்

தொடக்கம்

2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேங், நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்

அமைதி

அமைதி

முதலில் வேதாளம் படத்தில் வரும் அஜித் போல் பொறுமையாகவே பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார் வார்னர். பந்துவீச்சாளர்கள் டேவிட் வார்னரின் தலைக்கு குறிவைத்து ஷாட் பிட்ச் பந்துவீசினாலும், அதனை லாவகமாக விட்டு பொறுமையாகவே விளையாடினார் வார்னர்

அதிரடி

அதிரடி

வார்னரின் அமைதி ஆட்டத்தால் சற்று நொந்து போன லாபஸ்சேங், சற்று அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் தனது பொறுமையான வேடத்தை கலைத்த வார்னர், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என தெறிக்கவிட்ட வார்னர் அரைசதம் கடந்தார்.இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது

Recommended Video

Ben Stokes bowls 14 no-balls! 3rd umpire misses overstepping in Gabba Ashes Test | OneIndia Tamil
150 ரன்கள்

150 ரன்கள்

50 ரன்களை கடந்த பிறகு மிண்டும் வார்னர் 7 பவுண்டரிகளை அடித்தார். இதனால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்தனர். இதனால் இங்கிலாந்தின் ஸ்கோரை ஆஸ்திரேலியா எளிதாக தாண்டி முன்னிலை பெற்றது. 2வது விக்கெட்டுக்கு வார்னர், லாபஸ்சேங் ஜோடி 156 ரன்களை சேர்த்தது. லாபஸ்சேங் 74 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய வார்னர் 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார். வார்னரை வீழ்த்திய அடுத்த பந்திலே கேமிரான் கிரீனையும் வீழ்த்திய ராபின்சன் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டார். 67 ஓவர் முடிவில்240 ரன்களுக்கு6 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது

Story first published: Thursday, December 9, 2021, 20:10 [IST]
Other articles published on Dec 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+