நடுவரிசையில் இமயமலை போல் நிற்கும் ராகுல்.. யாருமே கவனிக்காத ஒருநாள் ரெக்கார்ட்.. விவரம் இதோ
மும்பை : கடந்த சில வாரக்காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் என்றால், அது கேஎல் ராகுல் தான். அவரை ஏன் அணியில் வைத்து இருக்கீங்க என்று பல முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் ராகுல் தனது அபாரமான பேட்டிங் மற்றும் கீப்பிங் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். நேற்று ராகுல் மட்டும் இல்லை என்றால் இந்தியா தோற்று இருக்கும்.
189 ரன்களை துரத்தும் போது ராகுல் மட்டும் தனி ஆளாக நின்று 75 ரன்கள் அடித்தார். அதுவும் ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி நெருக்கடி கொடுத்த போது , ராகுல் இந்த இன்னிங்சை ஆடினார்.

நியூசிக்கு எதிராக ராகுல்
தொடக்க வீரராக ராகுல் சொதப்பினாலும், நடுவரிசையில் மைக்கேல் பெவன், ஹஸி போல் சிறப்பாக ஆடி வருகிறார். நம்பர் 5வது வீரராக கடைசி 15 இன்னிங்சில் மட்டும் ராகுல் எவ்வளவு முக்கியமான இன்னிங்சை ஆடி இருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம். நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 156 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

அபார ஆட்டம்
அப்போது களத்திற்கு வந்த ராகுல் 64 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 347 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோரை எட்டியது. இதே போன்று நியூசிலாந்தில் இந்திய அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து தடுமாறியது,அப்போது 113 பந்துவீச்சில் 112 ரன்களை ராகுல் விளாச இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.

சேஸிங்கில் ராகுல்
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ராகுல் 70 பந்தில் 73 ரன்கள் எடுக்க இந்திய அணி 186 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இதே போன்று இலங்கைக்கு எதிராக 219 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்திய போது 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5வது வரிசையில் அபாரம்
அப்போது களத்திற்கு வந்த ராகுல் 103 பந்தில் 64 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதே போன்று நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 189 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது இந்தியா 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது ராகுல் 75 ரன்கள் விளாசி வெற்றியை தேடி தந்தார். 17வது இன்னிங்சில் 5வது இடத்தில் விளையாடிய ராகுல் 733 ரன்கள் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications