Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பயன்படுத்திய பயங்கர யுக்தி.. தோனி, ரோஹித் கூட செய்தது இல்ல.. ஹர்சா போக்லே புகழாரம்

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை போன்ற ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் 163 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி சிறப்பாக கையாண்டு எட்டியது.

மேலும் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள், பனிப்பொழிவு என இக்கட்டான நிலையிலும் இந்திய வீரர்கள் இலங்கை அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த காரியம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இரண்டு யுக்திகளை கையாண்டிருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.

 ஹர்திக் யுக்தி

ஹர்திக் யுக்தி

அதில் இலங்கை கேப்டன் ஷனாகா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் வெற்றி இலக்கை அவர் எளிதாக எட்டி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஷனாகா 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அப்போது உம்ரான் மாலிக் வீசிய பந்து ஒன்று ஷனாகாவின் கால்களுக்கு நடுவே இருந்த பேட்டில் பட்டு அது இஷாந்த் கிஷனிடம் கேட்ச் ஆனது. இதற்கு நடுவர் அவுட் தரவில்லை. இது அவுட் இல்லை என இந்திய வீரர்களுக்கு தெரியும்.

கவன சிதறல்

கவன சிதறல்

ஆனால் ஆட்டத்தின் வேகத்தை குறைக்க ஹர்திக் பாண்டியா ரிவ்யூ கேட்டார். பேட்டில் பட்ட பந்து நேரடியாக இசான் கிஷனிடம் கேட்ச் ஆனதா இல்லை தரையில் பந்து பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய மூன்றாம் நடுவர் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார். இது போன்ற ரிவ்யூவை கேட்கும் போது தாமதம் ஆகும் என ஹர்திக் பாண்டியாவுக்கு நன்றாகவே தெரியும். இதனால் வேகமாக சென்ற ஆட்டத்தை பிரேக் போட்டு நிறுத்தி இலங்கை வீரர்களின் கவனத்தைக் சிதைக்க இந்தியா எடுத்த முயற்சியாக இது கருதப்பட்டது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இதில் நாட் அவுட் இல்லை என தெரிந்ததும் எனினும் அடுத்த பந்திலேயே கவன சிதறல் காரணமாக ஷனாகா கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் நடுவர் அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணமாகத்தான் இந்த விக்கெட்டை எடுக்க முடிந்தது என ஹர்ஷா போக்லே கூறினார். இதேபோன்று கடைசி ஓவரிலும் பந்து வீச இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு பந்தின் போதும் அக்சர் பட்டேலிடம் பேசி நம்பிக்கை கொடுத்தார்.

தாமதம்

தாமதம்

மேலும் அடுத்த பந்தை வீச, வேண்டுமென்றே தாமதம் ஆக்கினார். இதன் மூலம் அழுத்தம் அதிகரிக்க இலங்கை வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.இந்த யுக்தியை ஒரு காலத்தில் அனைத்து அணிகளும் செய்தன. ஆனால் அதன் பிறகு ஆட்டத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக பந்து வீசும் பந்துவீச்சாளரிடம் பேசுவது போன்ற யுக்தியை நிறுத்தி விட்டார்கள். ஆனால் சரியான நேரத்தில் போட்டியை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இலங்கை வீரர்களின் கவனத்தை ஹர்திக் சிதறடித்தார்.

 ஹர்திக் மாஸ்டர் ஸ்ட்ரோக்

ஹர்திக் மாஸ்டர் ஸ்ட்ரோக்

இது ஹர்திக் பாண்டியா செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட இறுதி ஆட்டத்தில் தோனி பந்துவீச்சாளரிடம் கடைசி ஓவரில் பேசி ஆட்டத்தை தாமதப்படுத்தி விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு தோனியே இந்த காரியத்தை செய்வதில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பயன்படுத்தினார்.

Story first published: Wednesday, January 4, 2023, 16:15 [IST]
Other articles published on Jan 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+