Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா மோது… விளையாடு…! எல்லா அணிகளையும் வம்பிழுக்கும் அந்த கத்துக்குட்டி டீம்

டேராடுன்: சர்வதேச அளவில் எந்த அணியை பார்த்தும் ஆப்கானிஸ்தான் அணி பயப்பட வில்லை என்று அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

உத்தர்காண்டில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் 3 டி-20, 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என வென்று சாதனை படைத்தது.

தொடர்ந்து நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2-2 என வென்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லாமல் போனது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டேராடுனில் கடந்த 15ம் தேதி துவங்கியது.

சாதனை வெற்றி

சாதனை வெற்றி

அதில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பங்கேற்ற 2வது டெஸ்டிலேயே வென்று ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.

இந்தியாவுடன் தோல்வி

இந்தியாவுடன் தோல்வி

முன்னதாக கடந்த ஆண்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் எந்த அணியைப்பார்த்தும் ஆப்கானிஸ்தான் அணி பயப்படவில்லை என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் ஆட்டம்

ஆப்கன் ஆட்டம்

அவர் கூறியிருப்பதாவது:எங்கள் அணி வீரர்களிடம் தகுதியும், திறமையும் உள்ளது. ஆசிய கோப்பையில் எங்களின் ஆட்டத்தை அனைவரும் பார்த்தனர். எங்களால் சர்வதேச அளவில் எந்த அணியையும் வெற்றி பெற முடியும்.

சாதிக்க முடியும்

சாதிக்க முடியும்

உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் கூட எங்களால் சாதிக்க முடியும். அதற்கு முதலில் சாதிக்க முடியும் என்று நாங்களே நம்பவேண்டும் என்றார்.

Story first published: Tuesday, March 19, 2019, 18:08 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+