For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BBL: 10 பந்தில் 27 ரன்.. டீமை படுகுழியில் தள்ளிய பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப்.. பிரிஸ்பேன் வெற்றி

பிரிஸ்பேன்: 2025 - 26 பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் வலம் வந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு, பிரிஸ்பேன் ஹீட் அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கப்பா (Gabba) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப்பின் பந்துவீச்சை பிரிஸ்பேன் பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் தனது முதல் தோல்வியைத் தழுவியது.

மெல்போர்ன் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஹாரிஸ் ரவுஃப்பின் கடைசி நேர பந்துவீச்சுதான். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் மெல்போர்ன் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. பிரிஸ்பேன் வெற்றிக்குக் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டன.

Brisbane Heat vs Melbourne Stars BBL 2026 Haris Rauf gave runs as Max Bryant and Xavier Bartlett Pull Off Thriller

ஹாரிஸ் ரவுஃப் தனது முதல் 2 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். ஆனால், 'டெத் ஓவர்'களில் கதை மாறியது. மேக்ஸ் பிரையன்ட் களத்தில் நங்கூரமிட்டு அடிக்கத் தொடங்கியதும் ரவுஃப் திணறினார். அவர் வீசிய கடைசி 1.4 ஓவர்களில் (10 பந்துகள்) மட்டும் பிரிஸ்பேன் வீரர்கள் 27 ரன்களை விளாசித் தள்ளினர். இதுவே ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

முன்னதாக பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு சாம் ஹார்பர் (37), கேப்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (43) ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கடைசி நேரத்தில் பிளேக் மெக்டொனால்ட் ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 12 பந்துகளைச் சந்தித்த அவர், 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 37 ரன்களைக் குவிக்க, அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

196 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் அணிக்கு காலின் முன்ரோ ஏமாற்றமளித்தார். இருப்பினும், கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி (43) மற்றும் ரென்ஷா (41) ஆகியோர் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மேக்ஸ் பிரையன்ட் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஜோடி வெற்றியை உறுதி செய்தது.

குறிப்பாக, மேக்ஸ் பிரையன்ட் 26 பந்துகளில் 48 ரன்களும், பார்ட்லெட் 9 பந்துகளில் 21 ரன்களும் விளாசினர். பீட்டர் சிடில் மற்றும் டாம் கரன் வீசிய ஓவர்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. இறுதியில் 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸின் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

Story first published: Saturday, January 3, 2026, 12:54 [IST]
Other articles published on Jan 3, 2026
English summary
Brisbane Heat vs Melbourne Stars BBL 2026: Haris Rauf gave runs as Max Bryant and Xavier Bartlett Pull Off Thriller
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+