Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகிழ்ச்சி அறிவிப்பு.. ஒருவழியாக 'பெர்மிஷன்'.. இந்திய அணி வீரர்கள் நிம்மதிக்கு அளவே இல்ல

மும்பை: இந்திய அணி வீரர்கள் 'ஹப்பாடா' என்று திருப்தி அடையும் வகையிலான அனுமதியை இங்கிலாந்து அரசு வழங்கியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. அதேசமயம், பெண்கள் அணியும் அங்கு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்கிறது இதற்காக இந்திய அணி மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது. இன்றோடு குவாரண்டைன் முடிவடைகிறது.

 பெரும் சந்தேகம்

பெரும் சந்தேகம்

முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்.. இறுதிப் போட்டி வரை இந்திய அணி.. என்று இத்தொடரின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கொரோனா காலத்தில் மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுக்கும் சூழலில், ரசிகர்கள் இப்போட்டியை காண ஏகபோக வெயிட்டிங். பலம் வாய்ந்த இரு அணிகள், கடினமான பிட்ச் என்று ஒரு பெரும் சவாலான தொடரை எதிர்நோக்கியுள்ளது கோலி டீம்.

 வீரர்கள் நிம்மதி

வீரர்கள் நிம்மதி

இத்தொடருக்காக, நாளை (ஜூன். 2) இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்நிலையில், இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி குடும்பத்தினருக்கும் இங்கிலாந்து வர ஒருவழியாக அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால், வீரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏனெனில், மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு தங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

 நெகட்டிவ் ரிசல்ட்

நெகட்டிவ் ரிசல்ட்

Bio-safety நெறிமுறைகளின்படி, இங்கிலாந்து அரசு மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தேவைகளுக்கு ஏற்ப, இந்திய அணி, சார்ட்டர் விமானத்தில் இங்கிலாந்து வருகிறது. அப்போது, பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் ரிசல்ட்டை வீரர்கள் கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து வருவதற்கு முன்னர், இந்திய அணி மும்பையில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்தது. அப்போது வழக்கமான சோதனைகள் எடுக்கப்பட்டிருக்கும். இங்கிலாந்து வந்ததும் அவர்கள் நேரடியாக ஹாம்ப்ஷயர் Bowl-ல் உள்ள ஹோட்டலுக்குச் செல்வார்கள், அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

 சிறிய குழுக்களாக

சிறிய குழுக்களாக

இங்கிலாந்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் போது, வழக்கமான சோதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததென்றால், படிப்படியாக வீரர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும். முதலில் சிறிய சிறிய குழுக்களாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிறகு குழுவின் அளவு அதிகரிக்கப்படும். எனினும், கடுமையான பயோ-பபுள் விதிமுறை பின்பற்றப்படும்.

Story first published: Tuesday, June 1, 2021, 13:08 [IST]
Other articles published on Jun 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+