Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க பேக் நாட்-அவுட்டா இருக்குது.. அனில் கும்ப்ளேயிடம் ஜாலியாக 'சாரி' கேட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸ்

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள அந்த நாட்டு அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு இந்திய அணி புறப்பட்டு சென்றுள்ளது.

நேற்று முன்தினம் மும்பையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் சென்றடைந்த இந்திய அணி அங்கிருந்து மே.இ.தீவுகளின் செயின்ட் கீட்ஸ் விமான நிலையம் சென்றடைந்தபோது பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயின் பையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டன் கேட்விக் விமான நிலையத்திலேயே தவற விட்டது தெரிந்தது.

British Airways apologized to Anil Kumble for leaving kit bag behind

அதன்பின் மற்றொரு விமானம் மூலம் பை கொண்டு வரப்பட்டது. இந்த தவறுக்கு கும்ப்ளேவிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் டிவிட்டர் மூலம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.

கிரிக்கெட் வார்த்தைகளை பயன்படுத்தி பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஜாலியான முறையில் வருத்தம் தெரிவித்துள்ளது. இதை படித்து பார்த்த கும்ப்ளே சிரித்துக்கொண்டாராம்.

முன்னதாக சச்சின் ஒருமுறை பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் செயல்பாடு திருப்தியாக இல்லை என அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 8, 2016, 14:27 [IST]
Other articles published on Jul 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+