
பாலியல்
ஆனால், எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் இனவெறி குறித்து பாலியல் குறித்தும் பதிவிட்ட டீவீட்டுக்கள் சமூக தளங்களில் வைரலாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை அனைத்து வித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இங்கிலாந்து வாரியத்தின் இந்த முடிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக, ஓலே ராபின்சன், கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த டிவீட்ஸ் சர்ச்சையில் சிக்கியது. அவர் தனது ட்வீட் ஒன்றில், "வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோல், இனவெறி குறித்தும் ட்வீட் செய்திருந்தார்.

வெட்கப்படுகிறேன்
பிறகு, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடனேயே அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதற்கான அவர் வீடியோவே வெளியிட்டிருந்தார். அதில், "எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.

மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்
அந்தக் காலத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். இன்று களத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எனது அறிமுக டெஸ்ட் போட்டி அறிமுகத்தில் எனது பெருமை பற்றியதாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த காலத்தில் எனது சிந்தனையற்ற நடத்தை இதைக் கெடுத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

விளையாட தடை
அதேசமயம், இந்த விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதுகுறித்து இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில், "எதிர்காலத்தில் இனிமேல் ராபின்சன் சம்பவம் போல் நிகழாமல் இருக்க, புதிதாக அணியில் இணையும் வீரர்களின் கடந்த கால சமூக தள டிவீட்ஸ், மெசேஜஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். ராபின்சன் தனது செயல் குறித்து இங்கிலாந்து அணிக்கும், இந்த உலகிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டிய வேண்டியுள்ளது" என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு மீண்டும் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதிர்ச்சி அடைந்த இளைஞன்
அதன்படி, இங்கிலாநது கிரிக்கெட் வாரியம் அவரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியது. இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ராபின்சனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், "பல வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட்.. அதுவும் ஒரு டீன் ஏஜ் பருவத்தில் அவர் பதிவிட்ட ட்வீட். அந்த டீன் பருவத்தில் செய்த தவறுக்கு ஒரு முதிர்ச்சி அடைந்த இளைஞனாக அவர் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படி கேட்டும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் மீது எடுத்த நடவடிக்கை அதிகபட்சமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ஓலே ராபின்சனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், இப்போது இங்கிலாந்து பிரதமரே அவருக்கு ஆதரவாக களமிறங்க, தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது இங்கி., வாரியம்.


Click it and Unblock the Notifications











