Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்து பட்டு பலியான பவளன் பத்மநாதன்.. சோகத்தில் பிரிட்டிஷ் தமிழர்கள்

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பந்து மார்பில் பட்டு படுகாயமடைந்து பவளன் பத்மநாதன் என்ற தமிழ் கிரிக்கெட் வீரர் மரணமடைந்த சம்பவம், பிரிட்டிஷ் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாதன் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், கிரிக்கெட் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

பிரிட்டிஷ் தமிழர்கள் கிரிக்கெட் லீக் என்ற குடையின் கீழ் பல்வேறு கிரிக்கெட் கிளப்கள் இங்கிலாந்தில் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றான மணிப்பே கிரிக்கெட் கிளப் அணியைச் சேர்ந்தவர் பத்மநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு முதல்

2005ம் ஆண்டு முதல்

2005ம் ஆண்டு பிரிட்டிஷ் தமிழர்கள் கிரிக்கெட் லீக் அமைப்பு தொடங்கப்பட்டது. இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். பெரும்பாலும் இலங்கைத் தமிழர்கள்தான் இதில் அதிகம்.

2006 முதல் போட்டிகள்

2006 முதல் போட்டிகள்

2006ம் ஆண்டு பல்வேறு கிரிக்கெட் கிளப்களை இணைத்து லீக் போட்டிகள் நடத்தப்பட ஆரம்பித்தன. அன்று முதல் ஆண்டுதோறும் இங்கு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

1000 வீரர்கள்

1000 வீரர்கள்

தற்போது பிரிட்டிஷ் தமிழர்கள் கிரிக்கெட் லீக்கில் 1000 இளம் தமிழர்கள் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். 32 கிளப்கள் இதில் இணைந்துள்ளன. 44 அணிகள் உள்ளன.

ஈழத் தமிழர் பத்மநாதன்

ஈழத் தமிழர் பத்மநாதன்

மரணமடைந்த இளம் வீரர் பவளன் பத்மநாதன் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். மணிப்பே பாரிஷ் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர். பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த பந்து மார்பில் தாக்கியதில் சுருண்டு விழுந்தார் பத்மநாதன். உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் பத்மநாதன்.

யாழ்ப்பாணத்தில் படித்தவர்

யாழ்ப்பாணத்தில் படித்தவர்

பத்மநாதன், யாழ்ப்பாணத்தில் உள்ள ஹார்ட்லி கல்லூரியில் படித்தவர் ஆவார். அவரது மரணம் குறித்து மணிப்பே ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

சுர்ரே கிரிக்கெட் கிளப் அஞ்சலி

சுர்ரே கிரிக்கெட் கிளப் அஞ்சலி

இதேபோல சுர்ரே கிரிக்கெட் கிளப் தலைமை செயலதிகாரி ரிச்சர்ட் கோல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இளம் கிரிக்கெட் வீரர் பவளனின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அணியினர், குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலும், அனுதாபமும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 8, 2015, 13:12 [IST]
Other articles published on Jul 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+