லார்ட்ஸ் : இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி 9ம் தேதி லார்ட்ஸில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியிலும் இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பும்ரா அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது காயமடைந்தார். அவர் இதுவரை இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காயம் காரணமாக விக்கெட் கீப்பர் சாகா, வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே பந்து வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.