For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏம்ப்பா.. பும்ரா.. இப்படி பவுலிங் போட்டா எப்படி? ஒரே ஓவர்ல பாரு 19 ரன்கள்..! ரசிகர்கள் டென்ஷன்

டெல்லி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் இறுதி போட்டியில் ஆத்திரப்பட்ட பந்துவீச்சாளர் பும்ரா, ஒரே ஓவரில் 19 ரன்களை வாரி கொடுத்ததால் ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.

டெல்லியில் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கியது. இரு அணிகளுக்கு முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருந்தது.

முக்கியமான போட்டிகளில் உணர்ச்சிவசப்படாமல் விளையாட வேண்டும். ஆத்திரத்தில் விளையாண்டால் இழப்பு என்பதை கிரிக்கெட் போட்டிகளில் பல வீரர்கள் மறந்துவிடுகின்றனர். அப்படியொரு நிலையில் ஆத்திரப்பட்ட பும்ரா ஒரே ஓவரில் 19 ரன்களை வாரிக் கொடுத்திருக்கிறார்.

வயசானாலும்... திறமையும், வேகமும் மாறவே இல்லை.. தல தோனியை பாராட்டும் அந்த வீரர் வயசானாலும்... திறமையும், வேகமும் மாறவே இல்லை.. தல தோனியை பாராட்டும் அந்த வீரர்

48வது ஓவரில் பும்ரா

48வது ஓவரில் பும்ரா

கடுப்பான ரசிகர்களோ.. மிக முக்கியமான ஆட்டத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று கொதிப்பில் உள்ளனர். விஷயம்இதுதான்.. இன்னிங்சின் 48வது ஓவரை பும்ரா வீசினார்.

14 ரன்கள் தான்

14 ரன்கள் தான்

அதுவரை அவர் வீசிய 8 ஓவர்களில் 14 ரன்களை தான் எதிரணிக்கு விட்டுக் கொடுத்திருந்தார். அவரது பந்தை தேர்ந்தெடுத்து அடிப்பதற்கு ஆஸி. வீரர்கள் கொஞ்சம் திணறி தான் போயினர்.

பவுண்டரிகள் பறந்தன

பவுண்டரிகள் பறந்தன

கடைசி கட்டத்தில் அடித்து ஆட ஆஸி. வீரர்கள் முடிவு செய்திருந்த நேரம். 48வது ஓவரை பும்ரா வீச வந்தார். முதல் பந்து வீச ரிச்சர்ட்சன் 2 ரன்களை எடுத்தார்.

ரிச்சர்ட்சன் பவுண்டரி

ரிச்சர்ட்சன் பவுண்டரி

இரண்டாவது பந்து வேண்டுமென்றே எட்ஜ்ஜாக மாற்றி... தேர்ட்மேன் பவுண்டரிக்கு அனுப்பினார். 3வது பந்து... கவர் திசைக்கு ரிச்சர்ட்சன் திருப்ப பவுண்டரி.

அருமையான யார்க்கர்

அருமையான யார்க்கர்

பும்ராவுக்கு ஆத்திரம் வந்தது. அடுத்த பந்தை வீசினார். அருமையான யார்க்கர். அதை முன்கூட்டியே கணித்ததால் என்னவோ.. ரிச்சர்ட்சன் தடுத்து ஆடினார். பந்து பும்ராவிடம் தஞ்சம் புகுந்தது.

டென்ஷனில் பும்ரா

டென்ஷனில் பும்ரா

அவர் சும்மா இருந்திருக்கலாம்.. ஏற்கனவே உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த பும்ரா... தேவையில்லாமல் பந்தை ரிச்சட்சன் இருக்கும் திசையை நோக்கி வேகமாக வீசுகிறார்.

பவுண்டரியாக மாறியது

பவுண்டரியாக மாறியது

ஸ்டம்பை நோக்கி அவர் வீசிய த்ரோ... தேர்ட் மேன் பவுண்டரிக்கு பறந்தது. விளைவு... 4 ரன்கள். டாட் பாலாக மாற வேண்டிய பந்தை பவுண்டரியாக தாரை வார்த்து தந்திருக்கிறார் பும்ரா.. என்ன ஒரு முட்டாள்தனம்.

ஒரே ஓவரில் 19 ரன்கள்

ஒரே ஓவரில் 19 ரன்கள்

அந்த ஓவரில் கமின்சும் தமது பங்குக்கு பவுண்டரி அடிக்க... ஒரே ஓவரில் 19 ரன்களை விட்டு கொடுக்க வேண்டியதாகி விட்டது. .இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி போராடுவதற்கான ரன்களை உயர்த்தி தரும் வகையில் இருந்தது பும்ராவின் பந்துவீச்சு.

ரன் விகிதம் உயர்வு

ரன் விகிதம் உயர்வு

தொடக்கத்தில் அருமையாக ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் என்று ஆஸி. அணி இருந்தது. அதன் பிறகு இந்தியாவின் பந்துவீச்சு ஓரளவு கை கொடுக்க ரன் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால்.. அதை எல்லாம் தமது ஒரே ஓவரில் காலி செய்துவிட்டார் பும்ரா என்று தான் சொல்ல வேண்டும்.

Story first published: Wednesday, March 13, 2019, 19:06 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
Richardson on fire as he smashes Bumrah for three consecutive boundaries in the 48th over. Bumrah ends the over by conceding yet another four.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X