அன்னிக்கு ராத்திரி முழுக்க பயந்தேன்... தூங்கவே இல்லை..! பும்ரா பவுலிங்கால் பீதியடைந்த ஸ்டார் வீரர்
மான்செஸ்டர்: பும்ராவின் பந்துவீச்சை நினைத்து, இரவெல்லாம் தூங்காமல் தவித்து வந்ததாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கூறியிருக்கிறார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவை, நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் 2வது முறையாக இறுதிக்கு நியூசிலாந்து செல்கிறது.
அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை, நியூசிலாந்து சந்திக்கிறது.

2 நாள் டெஸ்ட் போட்டி
இந்நிலையில் அரையிறுதியில் இந்திய அணியுடன் விளையாடியது குறித்து ராஸ் டெய்லர் மனம் திறந்து பேசியதாவது: அரையிறுதியானது 2 நாட்கள் நடந்தது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்ற எண்ணத்தை எங்களுக்கு தந்தது.

260 ரன்கள் வேண்டும்
வில்லியம்சன் அவுட் ஆன போது, அணியில் சவாலான இலக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. 260 ரன்கள் எடுத்தால், அது சவாலான இலக்காக இருக்கும் என்று வில்லியம்சன் என்னிடம் கூறினார்.

டெத் ஓவர் கிங்
மேலும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டுவர வேண்டுமானால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். டெத் ஓவர்களை வீசுவதில் உலகிலேயே தலைசிறந்தவர் பும்ரா.

3 மணிக்கு எழுந்தேன்
அவரை எப்படி சமாளிப்பது என்ற கேள்விக்கு இப்போதும் என்னிடம் பதில் இல்லை. அரையிறுதி நாளன்று. பும்ராவை எப்படி சமாளிக்க போகிறோம் என அதிகாலை 3 மணிக்கே எழுந்து யோசிக்க தொடங்கிவிட்டேன். நாங்கள் அவரின் ஓவரில் சரியாக ஆடவில்லை. சற்று தடுமாறினோம் என்பதை ஒத்துக் கொள்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications