Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முடிஞ்சா தொட்டுப்பார்”.. பும்ரா போட்ட அசத்தல் பந்து.. கதிகலங்கிப்போன பேர்ஸ்டோ - வீடியோ!

அமீரகம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை இந்திய வீரர் பும்ரா கதிகலங்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

“முடிஞ்சா தொட்டுப்பார்”.. பும்ரா போட்ட அசத்தல் பந்து.. கதிகலங்கிப்போன பேர்ஸ்டோ - வீடியோ!

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

அதன்படி நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சு சற்று சொதப்பிய போதும் பேட்டிங் வலுவாக இருந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 51 (24), இஷான் கிஷன் 70 (46) ஆகியோர் அதிரடி காட்டனர்.

ஃபார்முக்கு வந்த பும்ரா

ஃபார்முக்கு வந்த பும்ரா

இந்த போட்டியில் மற்ற பவுலர்கள் ஏமாற்றிய போதும் ஜஸ்பிரித் பும்ரா சூப்பர் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். குறிப்பாக அவர் வீசிய யார்க்கர் ஒன்று ஜானி பேர்ஸ்டோவை கதிகலங்கவைத்துவிட்டது. இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடி வந்தார். 36 பந்துகளை சந்தித்த அவர் 49 ரன்கள் சேர்த்தார். இப்படி அதிரடிகாட்டி வந்த போது அவருக்கு எதிராக 18வது ஓவரை பும்ரா வீசினார்.

யார்க்கர் கிங்

யார்க்கர் கிங்

இன்னிங்ஸின் கடைசி கட்டம் என்பதால் பேர்ஸ்டோ அனைத்து பந்துகளையும் தூக்கி அடிக்க முயன்றார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பும்ரா யார்க்கர் ஒன்றை வீசினார். லெக் ஸ்டம்பிற்கு அருகில் மிகவும் துல்லியமாக சென்ற அந்த யார்க்கரை சற்றும் எதிர்பாராத பேர்ஸ்டோ தடுமாறினார். இதனால் அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்து விக்கெட் கிடைத்தது. இறுதியில் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சென்றது.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

இந்திய அணியில் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை தவிற வேறும் யாரும் பெரிய அளவில் பந்துவீச்சில் சோபிக்கவில்லை. முன்னணி வீரர்கள் புவனேஷ்வர் குமார்54 ரன்களும், ஷமி 40 ரன்களும், ராகுல் சஹார்43 ரன்களையும் வாரி வழங்கி ஏமாற்றம் அளித்தனர். இதனால் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, October 19, 2021, 15:49 [IST]
Other articles published on Oct 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+