For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி மேட்சில் ஆட முடியாது.. திடீரென வந்து சொன்ன பும்ரா.. அணியில் இருந்து விலகல்.. என்ன நடந்தது?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.வெறும் இரண்டு நாளில் மொத்த ஆட்டமும் முடிவிற்கு வந்து இருக்கிறது

பும்ரா

பும்ரா

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. நான்காவது போட்டி மீண்டும் சிவப்பு பந்திலேயே நடக்கும். உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிக்கு தேர்வாக வேண்டும் என்பதால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டிக்கு மிகவும் கவனமாக தயாராகி வருகிறது.

டெஸ்ட்

டெஸ்ட்

உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதால் இந்திய அணி இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டும். அல்லது டிரா செய்ய வேண்டும். இதனால் இந்த அணி முதல் பலத்தோடு களமிறங்கும் என்று கூறுகிறார்கள்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார். குடும்ப காரணங்களுக்காக பும்ரா வெளியேறி உள்ளார். இன்று காலைதான் பும்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பும்ரா வெளியேற்றம்

பும்ரா வெளியேற்றம்

பும்ராவின் இந்த அறிவிப்பிற்கு உண்மையான பின்னணி என்ன என்று தெரியவில்லை. இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. ஓய்வு தேவை என்பதாலும் இவர் அணியில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, February 27, 2021, 15:44 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
Bumrah leaves from the Team India for the final test against England due to personal reasons.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+