உலக கோப்பையில் யாரும் எதிர்பாராத அந்த சாதனை… அனைவரையும் அசத்திய பும்ரா
மான்செஸ்டர்: உலக கோப்பையில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனை பும்ரா செய்திருக்கிறார்.
இங்கிலாந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்டவை அரையிறுதியில் நுழைந்துள்ளன.
மான்செஸ்டரில் முதல் அரையிறுதி போட்டி இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில், 8 விக். இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக முதல் நாளில் 211 ரன்களின் போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதிக மெய்டன் ஓவர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரும், பும்ராவும் வீசிய முதல் இரு ஓவர்களும் மெயிடன்களாகின. அதன் மூலம் இந்த உலக கோப்பைப் போட்டியில் அதிக மெயிடன் ஓவர்களை வீசிய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.

மற்றவர்கள் யார்?
இந்த உலக கோப்பை அதிக மெயிடன் ஓவர்களை வீசியவர்களின் பட்டியலில் உள்ளவர் ஆர்ச்சர். அவர் 8 மெய்டன் ஓவர்களை வீசி இருக்கிறார். கம்மின்ஸ், வோக்சும் 6 மெய்டன்கள் வீசினார். அமிர், மாரிஸ், ஸ்டார்க் ஆகியோர் 5 மெயிடன் ஓவர்கள் வீசி உள்ளனர்.

பவர்ப்ளே சாதனை
இதுதவிர இந்த உலக கோப்பையில் முதல் பவர்பிளேயில் (1-10 ஓவர்கள்) குறைந்த ரன்கள் கொடுத்த அணி என்கிற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. பந்துவீச்சை பொறுத்த வரை, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வருகிறார் பும்ரா.

நேர்த்தியான பந்துவீச்சு
சரியான வேகம் மற்றும் நேர்த்தியான பந்து வீச்சால் எதிரணியினரை திணறடிக்கிறார். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் முன்பு, இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என பெரும்பாலான கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆருடம் தெரிவித்தனர். இதற்கு பும்ராவின் வேகப்பந்து வீச்சு முக்கிய காரணம்.


Click it and Unblock the Notifications