Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்காலம் முக்கியம்.. 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பும்ரா.பின்னணியில் பரபரப்பு காரணம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வென்றது.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்க போகிறது.

எப்படி

எப்படி

இந்திய அணியில் ஏற்கனவே ஷமி, உமேஷ் யாதவ், ராகுல் போன்ற வீரர்கள் காயம் காரணமாக ஆடவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் ஜடேஜா, விஹாரி ஆகியோரும் மூன்றாவது டெஸ்டிற்கு பின் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார். பும்ரா இல்லாமல் இந்திய அணி ஆட உள்ளது. இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் தற்போது சிறியதாகவே உள்ளது.

பெரிதாகும்

பெரிதாகும்

ஆனால் அடுத்த போட்டியில் ஆடினால் இந்த காயம் பெரிதாக வாய்ப்பு உள்ளது. இது பும்ராவின் எதிர்காலத்தை பாதிக்கும். அதோடு பும்ராவால் இங்கிலாந்து தொடரில் ஆட முடியாமல் கூட போகும்.

மோசமான நிலை

மோசமான நிலை

இதன் காரணமாக பும்ராவை தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கி உள்ளனர். இன்று அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேனிற்கு பின் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இந்த ஸ்கேன் டெஸ்டில் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது .

பெரிதாகலாம்

பெரிதாகலாம்

இவர் தொடர்ந்து பவுலிங் செய்தால் இந்த காயம் பெரிதாகும். இதை தடுக்கும் பொருட்டு தற்போது பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அணிக்குள் ஷரத்துல் தாக்கூர் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, January 12, 2021, 11:09 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+