Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிக்கணும்னா இந்த 2 பேரை பத்திரமா பாத்துக்குங்க.. உண்மையை சொன்ன ஆஸி. வீரர்

மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அப்போது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் அணியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறி வந்தனர். யார் அணியில் இடம் பெற்றால் அணி உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம் என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.

Bumrah, Shami fitness is important for India in World cup says Tom Moody

ஆனால், அவர்கள் பலரும் மறந்த ஒரு விஷயத்தை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், அந்த அணியின் பயிற்சியாளராக உலகக்கோப்பை பெற்றுத் தந்த டாம் மூடி கூறி இருக்கிறார்.

அந்த இருவர் : இந்திய அணியில் பந்து வீச்சாளர்களின் பங்கு தான் கடந்த சில ஆண்டுகளாக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளது. அவர்களில் முக்கியமான இருவர் பும்ரா மற்றும் முகமது ஷமி. இவர்கள் இருவரும் சேர்ந்து பந்து வீசினால் எதிரணிகள் ரன் குவிப்பை தானாகவே குறைத்து விடும்.

உலகக்கோப்பை தொடர் : இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் விளையாட உள்ளது. அதனால், எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

காயம் ஏற்பட்டால் : ஆனால், அணியின் தூணாக வேகப் பந்துவீச்சில் கலக்கி வரும் பும்ரா மற்றும் ஷமி இருவரோ அல்லது வருவாரோ உலகக்கோப்பை தொடரின் இடையே காயம் ஏற்பட்டு விலகினால் என்ன நடக்கும் என்பதை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.

டாம் மூடி கருத்து : இது குறித்து பேசி இருக்கும் டாம் மூடி, உலகக்கோப்பைகக்கு செல்லும் முன் நாம் பந்துவீச்சாளர்களின் உடற்தகுதியை சரியாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது நீண்ட தொடர். இந்தியாவிடம் அதிக வீரர்கள் இருந்தாலும் முக்கிய வீரர்களை அவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என பும்ரா, ஷமி பற்றி கூறினார்.

மாற்று வீரர்கள் யார்? : ஒருவேளை பும்ரா, ஷமிக்கு காயம் ஏற்பட்டால் ஷர்துல் தாக்கூர் மட்டுமே அணியில் இருக்கிறார். முகமது சிராஜ் ஏற்கனவே போட்டிகளில் இடம் பெறுவார் எனும் பட்சத்தில் இந்திய அணி மாற்று வீரர்களை தேட வேண்டும். இதைத் தான் சுட்டிக் காட்டி இருக்கிறார் மூடி.

எல்லாமே மாறிப் போகும் : அதே நேரம், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு பும்ரா, ஷமி இல்லாத போட்டிகளில் மோசமாக இருக்கிறது. எனவே, இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்றால் டாம் மூடி சொல்வது போல பும்ரா, ஷமியை இந்திய அணி நிர்வாகம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

Story first published: Wednesday, September 6, 2023, 18:11 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+