Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயம் சரியாகவில்லை... இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகினார் பும்ரா!

லண்டன்: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இவர் ஏற்கனேவே டி20 தொடரில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதற்கு முன்னதாக அயர்லாந்தில் 2 டி20 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றது. அயலாந்துக்கெதிரான முதல் 20 ஓவர் போட்டியில் பும்ரா இடது கை கட்டை விரலில் காயமடைந்தார்.

bumrah to miss odi series too


காயத்தின் தன்மை காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் 20ஓவர் தொடரில் பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், பும்ரா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவிற்கு திரும்பும் முன்பாக ஜூலை 4 ஆம் தேதி பும்ரா லீட்ஸில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இத்தொடரில் காயமடையும் இரண்டாவது வீரர் பும்ரா ஆவார். ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் குருனால் பாண்டியாவும், ஒருநாள் தொடரில் அக்சார் படேலும் களமிறங்குகின்றனர்.

ஷர்துல் தாகூர் கடைசியாக பங்களாதேஷில் நிஹாதாஸ் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீ சியவர். இவர் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் சிறப்பாக விளையாடி முத்தரப்பு தொடரில் இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். நான்கு போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது திறமையை ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, July 7, 2018, 12:25 [IST]
Other articles published on Jul 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+