Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் போட்டியில் 100வது விக். வீழ்த்திய 2வது இந்தியர்.. யார்க்கர் மன்னனின் புதிய சாதனை

லீட்ஸ்: இந்திய அணியின் ஸ்டார் பவுலரான பும்ரா, இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய நபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிவிட்டது. தமது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. இலங்கை ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. ஆக மொத்தத்தில்... சம்பிரதாய போட்டி என்று தான் இதை சொல்லலாம்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் களம் கண்டது. தொடக்க வீரர்களாக கேப்டன் கருண ரத்னேவும், பெரேராவும் வந்தனர். ஸ்கோர் 17 ஆக இருந்தது. 4வது ஓவர். வீசியது பும்ரா. 4வது பந்தில் தல தோனியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார் கருணரத்னே. இந்த விக்கெட் தான் ஒருநாள் போட்டிகளில் பும்ராவின் 100வது விக்கெட்.

இலங்கைக்கு நெருக்கடி

இலங்கைக்கு நெருக்கடி

அவர் தொடங்கி வைத்த அந்த விக்கெட் வீழ்ச்சி இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தந்தது. அணியின் ஸ்கோர் 40 ஆக வந்தபோது பெரேரா அவுட். இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே பும்ராவின் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.

2வது ஓவரில் 100வது விக்.

2வது ஓவரில் 100வது விக்.

தனது பவுலிங்கில் ஒரு ரன்னை கூட அடிக்கவிடாமல் கருணரத்னேவுக்கு நெருக்கடியை கொடுத்த பும்ரா, அவரது விக்கெட்டை தனது இரண்டாவது ஓவரில் வீழ்த்தினார். அதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார்.

57 ஆட்டங்கள்

57 ஆட்டங்கள்

அதாவது முகமது ஷமிக்கு (56 போட்டிகள்) அடுத்த இரண்டாவது இடத்தை பும்ரா பிடித்துள்ளார். பும்ரா 57வது போட்டியில் தனது 100வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்திருக்கிறார். அதாவது ஷமியை விட ஒரு போட்டியில் கூடுதலாக விளையாடி இருக்கிறார்.

ஷமியின் சாதனை

ஷமியின் சாதனை

இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இர்பான் பதான்(59 போட்டிகள்), ஜாகீர் கான்(65 போட்டிகள்) ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த பட்டியலில் பும்ரா 2வது இடம் பிடித்துள்ளார். ஆனால் ஷமி சாதனையை முறியடிக்க முடியவில்லை.

Story first published: Saturday, July 6, 2019, 17:16 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+