உலகக் கோப்பை: ஃபேஸ்புக்கில் புதிய சாதனை படைத்த இந்திய ரசிகர்கள்
டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி ஃபேஸ்புக்கில் அதிகம் பேசி சாதனை படைத்துள்ளனர் இந்திய ரசிகர்கள்.
உலகக் கோப்பை போட்டிகள் என்னவோ பிப்ரவரி மாதம் தான் துவங்கியது. ஆனால் இந்திய ரசிகர்களோ ஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்தே உலகக் கோப்பை போட்டிகள் பற்றி ஃபேஸ்புக்கில் பேசத் துவங்கிவிட்டனர்.
இவ்வாறு உலகக் கோப்பை பற்றி ஃபேஸ்புக்கில் அதிகம் பேசிய பெருமை நம் இந்திய ரசிகர்களையே சேரும்.

ரசிகர்கள்
கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து 2 கோடியே 80 லட்சம் இந்தியர்கள் 34 கோடி முறை உலகக் கோப்பை போட்டிகள் குறித்து பேசியுள்ளனர் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறுதிப் போட்டி
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்த அன்று பலரும் அந்த இருநாட்டு அணிகளின் கேப்டன்கள் பற்றி தான் ஃபேஸ்புக்கில் பேசியுள்ளனர்.

ஃபேஸ்புக்
உலகக் கோப்பை இறுதிப் போட்டி பற்றி 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் 90 லட்சத்து 30 ஆயிரம் முறை ஃபேஸ்புக்கில் பேசியுள்ளனர்.

ஆண்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி பேசியதில் அதிகமானோர் 18 முதல் 24 வயது வரை உள்ள ஆண்கள் தான் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 25 முதல் 34 வயது வரை உள்ள ஆண்களும், 18 முதல் 24 வயது வரை உள்ள பெண்களும் உலகக் கோப்பை போட்டிகள் பற்றி அதிகம் பேசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications