
லாலா அமர்நாத்
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 1994ஆம் ஆண்டில் இருந்து வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை முதன்முறையாக லாலா அமர்நாத் பெற்றார்.

கவாஸ்கருக்கு விருது
2012ஆம் ஆண்டில் சுனில் கவாஸ்கருக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 2012-13ஆம் ஆண்டுக்கான விருதுக்குரியவரை தேர்வு செய்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் சஞ்சய் பட்டேல், மூத்த பத்திரிகையாளர் அயாஸ் மெமோன் ஆகியோர் கொண்ட கமிட்டி சென்னையில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தியது.

கபில்தேவ் விருது
இதில் இந்திய ஆல்-ரவுண்டர் ஜாம்பவான் கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை அளிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ரூ.25 லட்சம் பரிசு
கபில்தேவ் இந்த விருதை பெறும் 21வது வீரர் ஆவார். விருதுடன் ரூ.25 லட்சமும் பரிசு வழங்கப்படும். விருது வழங்கும் தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications