Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுமையான அணுகுமுறை... இது போதுங்க நாங்க சிறப்பா விளையாடறதுக்கு... அஸ்வின் பாராட்டு

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் ரஹானேவின் பொறுமை அணி வீரர்களை போட்டியில் சிறப்பாக விளையாட செய்ததாக அவர் புகழ்ந்துள்ளார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த 2வது போட்டியில் மட்டுமின்றி கடந்த பகலிரவு போட்டியிலும் ஸ்பின்னர் ஆர் அஸ்வின் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

5 விக்கெட்டுகள்

5 விக்கெட்டுகள்

தற்போது நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். மேலும் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் அஸ்வின்

சிறப்பாக விளையாட செய்தது

சிறப்பாக விளையாட செய்தது

இந்நிலையில் டிரஸ்ஸிங் ரூமில் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் பொறுமையான அணுகுமுறை தங்களை மைதானத்தில் நிலையாக விளையாட வைத்ததாக ரவி அஸ்வின் கூறியுள்ளார். மேலும் இந்த போட்டியில் அணி வீரர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் ரஹானேவின் பொறுமை மிகவும் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

முரளிதரனின் சாதனை முறியடிப்பு

முரளிதரனின் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோஷ் ஹாசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் அதிகமான இடதுகை வீரர்களை அதாவது 192 வீரர்களை வீழ்த்திய பெருமை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் முத்தையா முரளிதரனின் சாதனையை அவர் முந்தியுள்ளார்.

Story first published: Tuesday, December 29, 2020, 16:04 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+