For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை ஓங்கி அடித்த பும்ரா.. தலையில் பட்டு கலங்கி விழுந்த இளம் வீரர்.. களத்தில் நடந்த ஷாக் சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் இன்று பும்ரா வீசிய பந்தில் தலை கலங்கி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையடுத்து இன்று இரண்டு அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

முதல் பயிற்சி ஆட்டம் போலவே இன்று நடந்த பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பியது.

மோசம்

மோசம்

இன்று களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மோசமாக ஆடி அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள். இன்று பும்ரா மட்டுமே அதிரடியாக ஆடி 55 ரன்கள் எடுத்தார்.

அதிரடி

அதிரடி

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் இன்று பும்ரா வீசிய பந்தில் தலை கலங்கி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பும்ரா 40 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது கேமரூன் கிரீன் பவுலிங் செய்தார்.

கேமரூன் கிரீன்

கேமரூன் கிரீன்

இந்த பந்தை பும்ரா வேகமாக மிட் ஆன் திசை நோக்கி அடிக்க முயன்றார். ஆனால் அது நேராக பவுலரை நோக்கி சென்றது. பவுலிங் செய்த கேமரூன் கிரீன் மீது வேகமாக சென்று தலையில் பந்து பட்டது. பல கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து வேகமாக சென்று கேமரூன் கிரீன் தலையில் அடித்தது. இதில் கேமரூன் கிரீன் கலங்கி விழுந்து துடித்து போனார்.

கலக்கம்

கலக்கம்

இதனால் கேமரூன் கிரீன் கலங்கி கீழே விழுந்து துடித்து போனார். இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேமரூன் கிரீன் பாதியில் வெளியேறினார். இந்த தொடரில் மீதம் உள்ள பயிற்சி ஆட்டத்தில் இருந்தும் இவர் வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக பாட்ரிக் ராவ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். வலியில் கஷ்டப்பட்டபடி இவர் களத்தில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

Story first published: Friday, December 11, 2020, 17:03 [IST]
Other articles published on Dec 11, 2020
English summary
Australias Cameron Green got a concussion injury in today match against India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+